முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜஸ்தானில் விஷவாயு தாக்கி 4 பேர் பலி

செவ்வாய்க்கிழமை, 27 மே 2025      இந்தியா
Suicide 2023 04 29

Source: provided

 ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் நகைக்கடையில் உள்ள கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும் இரண்டு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

 இறந்தவர்கள் சஞ்சீவ் பால், ஹிமான்ஷு சிங், ரோஹித் பால் மற்றும் அர்பித் யாதவ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். ரசாயனக் கழிவுகளில் எஞ்சியிருக்கும் தங்கம் மற்றும் வெள்ளித் துகள்களை மீட்டெடுக்க 10 அடி ஆழமுள்ள கழிவுநீர் தொட்டியில் இறங்குமாறு தொழிலாளர்கள் வற்புறுத்தப்பட்டுள்ளனர்.

நகைக் கடை உரிமையாளர் கூடுதல் பணம் தருவதாக கூறியதால் கழிவுநீர் தொட்டியில், தொழிலாளர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட போது உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 20 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 21 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து