முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

செவ்வாய்க்கிழமை, 27 மே 2025      தமிழகம்
Bhavanisagar-Dam 2023 08 19

பவானிசாகர், பில்லூர் அணையில் இருந்து 15 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது பவானிசாகர் அணையாகும். நீலகிரி மலைப்பகுதியில் இருந்து பில்லூர் அணை, மேட்டுப்பாளையம் வழியாக வரும் பவானி ஆறு, கூடலூர் மலைப்பகுதியில் இருந்து வரும் மாயாறு பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து ஆதாரங்களாக விளங்குகிறது. இதனிடையே நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில மாதங்களாக மழை பெய்யாததால் பவானிசாகர் அணை நீர்மட்டம் 68 அடியாக குறைந்தது.

இந்தநிலையில் கோவை, நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.  100 அடி கொள்ளளவு கொண்ட அந்த அணை நீர்மட்டம் 3 நாட்களுக்கு முன் முழு கொள்ளளவை எட்டியது. இதனால் பாதுகாப்பு கருதி  வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 

இந்நிலையில் இரண்டாவது நாளாக நேற்றும் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு தொடர்ந்து வருகிறது. இதனால் கரையோர பகுதி பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பவானிசாகர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 16 ஆயிரத்து 572 கன அடியாக அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் 2 அடிக்கு மேல் உயர்ந்து 73.02 அடியாக இருந்தது. அணையில் இருந்து  405 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 20 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 21 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து