முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரனோய், பி.வி.சிந்து முன்னேற்றம்

செவ்வாய்க்கிழமை, 27 மே 2025      விளையாட்டு
PV Chinthu 2024 07 31

Source: provided

சிங்கப்பூர் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூர் உள்விளையாட்டு அரங்கில் நேற்று முதல் ஜூன் 1-ந் தேதி வரை நடக்கிறது. இதில் ஆண்களுக்கான முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் பிரனோய், டென்மார்க் வீரரான ராஸ்மஸ் கெம்கேவுடன் மோதினார். இந்த ஆட்டத்தில் பிரனோய் முதல் செட்டில் தோல்வியடைந்தார். இதனையடுத்து சுதாரித்து கொண்ட பிரனோய் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அடுத்த 2 செட்களையும் கைப்பற்றினார். இதனால் 19-21, 21-16, 21-14 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். 

இந்நிலையில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, கனடாவின் வென் யு ஜாங்குடன் மோதினார். இந்த ஆட்டத்தில் 21-14, 21-9 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அடுத்து சுற்றுக்கு பிவி சிந்து முன்னேறினார்.

________________________________________________________________________________________________________________

தடகளம்: இந்திய வீரருக்கு தங்கம்

26-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவின் குமி நகரில் நேற்று முதல் 31-ந் தேதி வரை நடக்கிறது. 43 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இதில் 59 பேர் கொண்ட இந்திய அணியும் அடங்கும். இந்நிலையில் முதல் நாளான நேற்று  ஆண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இதில் இந்திய வீரர் குல்வீர் சிங் கலந்து கொண்டார். 

கடைசி சுற்றுக்கு முந்தைய சுற்று வரை 4-வது இடத்தில் இருந்த குல்வீர், கடைசி சுற்றில் வேகத்தை அதிகப்படுத்தினார். இதனால் இந்த ஓட்டப்பந்தயத்தில் குல்வீர் சிங் முதல் இடம் பிடித்தார். அவர் பந்தய தூரத்தை 28:38.63 என்ற நேரத்தில் கடந்து தங்கப்பதக்கத்தை வென்றார். பாங்காக்கில் நடந்த கடந்த (2023) ஆசிய போட்டியில் இந்தியா 6 தங்கம், 12 வெள்ளி உள்பட 27 பதக்கங்கள் வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

________________________________________________________________________________________________________________

ஷ்ரேயாஸை கிண்டல் செய்த ரோகித்

ஐ.பி.எல். தொடரில் ஜெய்பூரில் நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. போட்டிக்குப் பிறகு பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரைப் போன்று முன்னாள் மும்பை கேப்டன் ரோகித் சர்மா நடந்து சென்று அவரைக் கட்டிப்பிடிப்பார்.

இந்த வீடியோவை மும்பை இந்தியன்ஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. ரோகித் சர்மாவின் இந்தக் குறும்புத்தனமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஐ.பி.எல். தொடரின் முக்கியமான போட்டியில் தோல்வியடைந்த பிறகும் இப்படியான குறும்புத்தனங்களை செய்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். ரோகித் சர்மா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் 5 கோப்பைகளை வென்றது குறிப்பிடத்தக்கது.

________________________________________________________________________________________________________________

சச்சின் சாதனை முறியடிப்பு 

ஐ.பி.எல். தொடரில் ஜெய்பூரில் நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இருப்பினும் மும்பை சார்பில் சூர்யகுமார் யாதவ் சிறப்பாக விளையாடி அந்த அணியின் 15 ஆண்டுகால சாதனையை முறியடித்து மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளார்.

சூர்யகுமார் யாதவ் இந்த சீசனில் 14 போட்டிகளில் 640 ரன்களை கடந்துள்ளார். இதற்கு முன்பாக மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒரு சீசனில் ஒரு வீரர் எடுத்த அதிகபட்ச ரன்களாக 618ஆகவே இருந்தது. அந்த சாதனை சச்சின் கைவசம் இருந்தது. தற்போது, 15 போட்டிகளில் சச்சின் செய்த சாதனையை 14 போட்டிகளிலேயே சூர்யகுமார் முறியடித்துள்ளார்.

________________________________________________________________________________________________________________

ஆர்.சி.பி.யின்  ஆர்மி வீடியோ வெளியீடு

ஐ.பி.எல். தொடர் 2008ஆம் ஆண்டுமுதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஆர்.சி.பி. அணி ஒருமுறைக்கூட கோப்பை வெல்லவில்லை. இருப்பினும் அதன் ரசிகர்கள் அந்த அணிக்கு ஆதரவளிப்பதையும் நேசத்தை பொழிவதையும் நிறுத்தியதில்லை என்பது கவனிக்கதக்கதாக இருக்கிறது. இந்நிலையில், ஆர்.சி.பி. அணி ரசிகர்களிடம் கையெழுத்துப் பெற்று அதனை தங்களது அணி வீரர்கள் அணிந்து விளையாடுவார்கள் எனக் கூறியுள்ளது.

இதை அணிந்து எந்த போட்டியில்  விளையாடுவார்கள் என்பது குறித்து எந்தத் தகவலும் தெரியவில்லை. அல்லது இது விளம்பர யுக்தியாக என்பதும் பின்னர் தான் தெரியவரும். எப்படி இருந்தாலும் ரசிகர்களின் கையெழுத்துப் பதிந்த இந்த ஜெர்சிக்களை (சீருடைகளை) அணியின் வீரர்கள் அணிந்து பயிற்சிசெய்தாலுமே பெருமைப்படக் கூடியதென ஆர்.சி.பி. ரசிகர்கள் நெகிழ்ச்சியடைந்து வருகிறார்கள். இதனை விடியோவாக வெளியிட்டு, 12த் மேன் ஆர்மி (அணியின் 12ஆவது வீரர்) என தனது ரசிகர்களை ஆர்.சி.பி. நிர்வாகம் பெருமையாகக் குறிப்பிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 20 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 21 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து