முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரொனால்டோ பதிவால் ரசிகர்கள் சோகம்

செவ்வாய்க்கிழமை, 27 மே 2025      விளையாட்டு
Ronaldo 2023 08 12

Source: provided

ஜெட்டா : பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோ பதிவு ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அல்-நசீர் அணிக்காக...

போர்ச்சுகலைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ சௌதி புரோ லீக்கில் அல்-நசீர் அணிக்காக விளையாடி வருகிறார். அல்-நசீர் அணி அல் ஃபடெக் உடன் 2-3 என தோல்வியுற்றது. சௌதி லீக்கில் இந்தப் போட்டிதான் ரொனால்டோவின் கடைசி போட்டி எனக் கூறப்படுகிறது. அல்-நசீர் அணிக்காக 111 போட்டிகளில் விளையாடி 99 கோல்கள் அடித்துள்ளார்.

அதிருப்தி...

ஏ.எப்.சி. சாம்பியன்ஸ் லீக்கில் தகுதிபெறாமல் அல்-நசீர் அணி வெளியேறியதால் ரொனால்டோ மீது அதிருப்தி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. 40 வயதாகும் ரொனால்டோ இந்த சீசனிலும் அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தியது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்கள் கவலை...

இந்நிலையில், தனது எக்ஸ் பக்கத்தில் ரொனால்டோ கூறியது ரசிகர்களை கவலையடைய வைத்திருக்கிறது. ரொனால்டோ கூறியதாவது: இந்த அத்தியாயம் முடிந்தது. இந்தக் கதை? இன்னும் எழுதப்படுகிறது. ரசிகர்கள் அன்புக்கு நான் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளேன் எனக் கூறியுள்ளார். உலக அளவில் அதிக கோல்கள் (936) அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் ரொனால்டோ நீடிப்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 20 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 21 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து