முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கமல்ஹாசன் கருத்துக்கு சபாநாயகர் ஆதரவு

வியாழக்கிழமை, 29 மே 2025      தமிழகம்
Kamal 2023-09-19

Source: provided

சென்னை: கமல்ஹாசன் கருத்து சரியானது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். 

'நாயகன்' படத்தை தொடர்ந்து, அதாவது 38 வருடங்களுக்கு பிறகு மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணியில் 'தக்லைப்' படம் உருவாகி இருக்கிறது. வருகிற ஜூன் 5-ந்தேதி படம் திரைக்கு வருகிறது.இதன் பட விழாவில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் சிறப்பு விருந்தினராக கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் சிவராஜ்குமார் பங்கேற்றார். 

அப்போது கமல்ஹாசன் பேசும்போது, ''ராஜ்குமாருடைய குடும்பம் கன்னடத்தில் இருக்கும் எனது குடும்பம். தமிழில் இருந்து பிறந்தது கன்னடம். அதனால் தான் சிவராஜ்குமார் இங்கு வந்துள்ளார்'', என்று குறிப்பிட்டார். கமல்ஹாசனின் இந்த பேச்சுக்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. 

கமல்ஹாசனின் இந்த பேச்சுக்கு, கர்நாடகா முதல்-மந்திரி சித்தராமையா கண்டனம் தெரிவித்து, 'கமல்ஹாசனுக்கு கன்னட மொழி குறித்த வரலாறு தெரியவில்லை' என்று கூறியுள்ளார். அதேபோல் கர்நாடகா மாநிலத்தின் பா.ஜனதா தலைவர் விஜயேந்திராவும் கண்டனம் தெரிவித்து, 'கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும்' என்று வலியுறுத்தி உள்ளார்.

இந்தநிலையில்  கமல்ஹாசன் கருத்து சரியானது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, திராவிட குடும்பத்தின் முதல் மொழி தமிழ் எனவும், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகள் தமிழில் இருந்துதான் பிறந்துள்ளதாகவும் ராபர்ட் கால்டுவெல் ஆய்வு செய்து கூறியுள்ளார். கமல்ஹாசன் கருத்துக்கு ஆதாரங்கள் உள்ளன. அவரின் கருத்து சரியானது. என தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து