முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

6 மாதங்களில் 25வது முறையாக வெடித்த ஹவாய்த்தீவு எரிமலை

வியாழக்கிழமை, 12 ஜூன் 2025      உலகம்
12-Valcano

Source: provided

ஹவாய் தீவு: அமெரிக்காவின் ஹவாய் தீவில் அமைந்துள்ள கிலாவியா எரிமலை வெடித்து உள்ளது. கடந்த 6 மாதங்களில் மட்டும் 25-வது முறையாக வெடித்துள்ளது.

அமெரிக்காவுக்கு சொந்தமான ஹவாய் தீவு, பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ளது. அமெரிக்க நிலப்பரப்பில் இருந்து தென்மேற்கே 2,000 மைல்களுக்கு அப்பால் அமைந்துள்ள இந்த தீவு, எரிமலைகளுக்கு புகழ் பெற்றது. சுற்றுலாப் பயணிகளின் வருகையும் ஆண்டு முழுவதும் இருக்கும். இங்குள்ள 5 பெரிய எரிமலைகளில் கிலாவியா ஒன்றாகும்.

1983ம் ஆண்டு முதல் எரிமலைக்குழம்பு தொடர்ந்து வெளியேறி வருகிறது. இந்த எரிமலை 4 ஆயிரம் அடி உயரம் கொண்டது. கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் வெடித்து சிதறியது. எரிமலைக் குழம்பில் 700 வீடுகள், சுற்றுலா மையங்கள், சாலைகள் சேதமடைந்தன. கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மீண்டும் வெடித்து சிதறியது. அப்போதும் பெரும் சேதம் ஏற்பட்டது.

தற்போது, கிலாவியா எரிமலை வெடித்துள்ளது. கடந்த 6 மாதங்களில் மட்டும் 25-வது முறையாக வெடித்துள்ளது. அந்த எரிமலையின் வடக்கு துவாரத்தின் வழியாக வெளியேறிய எரிக்குழம்புகள் 330 அடிக்கு சீறி உள்ளது. இது குறித்து ஆய்வாளர்கள் கூறியதாவது:-

கடந்த 6 மாதங்களாக அவ்வப்போது சீற்றம் பெற்று, எரிக்குழம்புகள் வெளியேறி வருகிறது. கிலாவியா எரிமலை எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் அபாயம் நிலவுகிறது. நாங்கள் தொடர்ந்து கவனித்து வருகிறோம், என்றனர். கடந்த 200 ஆண்டுகளாக தொடர்ந்து வெடித்து வருகிறது. ஹவாய் எரிமலை ஆய்வகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இதனை ஆராய்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து