முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹெலிகாப்டரில் திடீர் கோளாறு: ஆந்திர முதல்வரின் பயணம் ரத்து

செவ்வாய்க்கிழமை, 17 ஜூன் 2025      இந்தியா
Helicopter-2024-07

Source: provided

திருப்பதி : ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு செல்லும் ஹெலிகாப்டர் திடீர் கோளாரால் பயணங்கள் ரத்து செய்யப்பட்டது.

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று காலை தனது குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார். பின்னர் திருச்சானூர் பத்மாவதி தாயாரை பியூஷ் கோயல் தரிசனம் செய்​துவிட்டு கிருஷ்ணப்பட்டினம் துறை​முகத்திற்கு செல்வதற்கு தயாரானார். அப்போது அவர் செல்​ல​விருந்த ஹெலி​காப்​டரில் கோளாறு ஏற்​பட்டதால், தனது பயணத்தை ரத்து செய்து விட்டு தனது குடும்பத்தாருடன் விமானத்தில் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

தகவல் அறிந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிர்ச்சி யுற்று, அந்த ஹெலிகாப்டர் இனி தேவையா என்பதை அறிய வேண்டும் என டி.ஜி.பி. ஹரீஷ்குமார் குப்தாவுக்கு உத்தர​விட்டார். இதையடுத்து தலைமை கண்காணிப்பு பிரிவு அதிகாரிக்கு டி.ஜி.பி. எழுதியுள்ள கடிதத்தில், “முதல்வர் உள்ளிட்ட விவிஐபிக்கள் பயணம் செய்யும் ஹெலிகாப்டரில் அடிக்கடி கோளாறு ஏற்படுவது குறித்தும் ஆரய வேண்டும். இனி இந்த ஹெலிகாப்டரை பயன்படுத்தலாமா என்பது குறித்து அறிக்கை அளிக்க வேண்​டும்” என கேட்டுக்​கொண்டுள்ளார்​.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து