எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, தமிழ் என்றால் கசப்புடனும், தமிழர்கள் என்றால் வெறுப்புடனும் பார்க்கக் கூடிய மத்திய பா.ஜ.க. அரசு, கீழடி அகழாய்வுகளில் வெளிப்பட்ட தமிழ்ப் பண்பாட்டின் பெருமையை மறைக்கவும் புதைக்கவும் தொடர்ந்து முயற்சித்து வருகிறது.
கீழடி அகழாய்வுகள் நடத்தப்பட்டபோது அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்றது. ஆனால், கீழடி அகழாய்வு முடிவுகளை ஏற்க மறுக்கும் மத்திய பா.ஜ.க. அரசின் மொழி வெறி - இன வெறி நடவடிக்கை பற்றி அ.தி.மு.க. இதுவரை வாய் திறக்கவில்லை என முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து தி.மு.க. தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “பாண்டிய மன்னரின் படைகள்தான் மறுபடியும் அணிவகுத்ததோ, பட்டாளச் சிப்பாய்கள்தான் களம் புகுந்தனரோ என விழிகள் வியந்து பார்க்கின்ற வகையில் மதுரை விரகனூர் சாலையில் ஜூன் 18-ம் நாள் தி.மு.க. மாணவரணியினர் அன்னைத் தமிழின் பெருமை காத்திடக் களமிறங்கினர். தமிழர்களின் பண்பாட்டுப் பெருமையைப் பறைசாற்றும் கீழடி அகழாய்வுகள் குறித்த அறிவியல்பூர்வமான ஆய்வறிக்கையை மத்திய பா.ஜ.க. அரசு திட்டமிட்டுப் புறக்கணித்து, திருப்பி அனுப்பியதற்கான எதிர்வினைதான் தி.மு.க. மாணவரணியின் மாபெரும் ஆர்ப்பாட்ட அணிவகுப்பு.
கீழடியில் நடந்த அகழாய்வுகள், தமிழர்களின் நாகரிகம் தனித்துவமான நாகரிகம் என்பதையும், தமிழர்களின் பண்பாடு மிகவும் தொன்மையானது என்பதையும் ஆதாரப்பூர்வமாக மெய்ப்பித்த அகழாய்வாகும். கருணாநிதி 2016 செப்டம்பர் 29 அன்று தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், “கீழடியில் உள்ள கட்டிடங்களும், கிடைத்திருக்கும் பழங்காலப் பொருள்களும் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் தொடங்கி, கி.பி. பத்தாம் நூற்றாண்டு வரை இங்கு வாழ்விடங்கள் இருந்ததற்கான சான்றுகளாக உள்ளன.
கட்டிடங்கள் சதுரம், செவ்வகம், நீள்சதுர வடிவங்களில் உள்ளன. கட்டிடங்கள் தெற்கு வடக்காகக் கட்டப்பட்டுள்ளன. அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய கருப்பு - சிவப்பு நிறத்திலான மண் பானைகள் கிடைத்துள்ளன. சுடு செங்கற்களால் உற்பத்தி செய்யப்பட்ட தட்டுகள், குவளைகள் கிடைத்துள்ளன. தந்தம், செம்பு, இரும்பு ஆகியவை பயன்பாட்டில் இருந்திருக்கின்றன. அகழாய்வில் மொத்தம் 5,300 பொருள்கள் இதுவரை கிடைத்துள்ளன. இதன் மூலம் சங்க காலத் தமிழகம் நகர்ப்புற நாகரிகத்தை கொண்டதல்ல என்ற கருத்து தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்த அகழாய்வில் கிடைத்த தமிழ் பிராமி எழுத்துகள் கொண்ட பானை ஓடுகளும் மற்றும் தொல்பொருட்களும் தமிழர் நாகரிகத்தின் தொன்மையைப் பறைசாற்றுகின்றன. சிந்துசமவெளி நாகரிகத்தைப் போல இங்கும் ஒரு நகர்ப்புற நாகரிகம் இருந்ததற்கான தடயங்கள் ஏராளமாகக் கிடைத்துள்ளன. இதுவரை தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் கீழடியில் நடைபெற்றிருக்கும் ஆய்வுதான் மிகச் சிறப்பானது. புதிய தமிழ்ச் சொற்களும் இங்கு கிடைத்துள்ளன” என்று பதிவிட்டு மகிழ்ந்ததுடன், “ஹரப்பாவை ஒத்த தமிழர் நாகரிகத்துக்கான கீழடி சான்றுகளை உடனடியாகக் காப்பாற்றவும், பாதுகாக்கவும் தவறினால், அவை முடங்கிப் போகும் பேராபத்து உருவாகும்” என்ற எச்சரிக்கையையும் விடுத்திருக்கிறார்.
மூத்த மொழியாம் தமிழுக்குச் செம்மொழித் தகுதியைப் பெற்றுத்தந்த கருணாநிதி, 2016-ம் ஆண்டிலேயே கீழடி ஆய்வுகளின் பெருமையை உலகத்தவர் அறிந்து கொள்ளும் வகையில் பதிவிட்டிருப்பதன் மூலம், வரலாற்றில் தமிழுக்கும் தமிழர்களுக்கும் உள்ள தனித்துவமான முக்கியத்துவத்தை உணர்த்தியிருக்கிறார். அதேவேளையில், நாம் கவனமாக இருக்க வேண்டும் என்று அப்போதே எச்சரித்தும் இருக்கிறார்.
கருணாநிதி எச்சரித்தது போலவே, தமிழ் என்றால் கசப்புடனும், தமிழர்கள் என்றால் வெறுப்புடனும் பார்க்கக் கூடிய மத்திய பா.ஜ.க. அரசு, கீழடி அகழாய்வுகளில் வெளிப்பட்ட தமிழ்ப் பண்பாட்டின் பெருமையை மறைக்கவும் புதைக்கவும் தொடர்ந்து முயற்சித்து வருகிறது.
2013-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இந்தியத் தொல்லியல் துறையால் வைகை ஆற்றங்கரையில் தள ஆய்வு நடத்தப்பட்டு, கீழடி ஒரு முக்கிய குடியிருப்புத் தளம் என அடையாளம் காணப்பட்டது. அதன் பின்னர் அகழாய்வு தொடர்ந்த நிலையில் மத்தியத்தில் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க. அரசு, 2015-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 3 கட்டங்களோடு கீழடி அகழாய்வை நிறுத்திக் கொண்டது. மீதமிருந்த 7 கட்டங்களையும் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை மேற்கொண்டது.
தொல்லியல் பணிகளை மேற்கொண்ட இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணாவை அசாம் மாநிலத்திற்கு இடமாறுதல் செய்து தமிழ்ப் பண்பாட்டின் மீதான வெறுப்புணர்வை பா.ஜ.க. அரசு அப்பட்டமாகக் காட்டியது. எனினும், அமர்நாத் ராமகிருஷ்ணா 2016-ல் கீழடி அகழாய்வு குறித்த தொடக்க அறிக்கையையும், 2017-ம் ஆண்டில் இடைநிலை அறிக்கையையும் இந்திய அரசின் தொல்லியல் துறையிடம் வழங்கினார். சட்டப் போராட்டத்தின் மூலம் தமிழ்நாட்டிற்கு அவர் மீண்டும் வந்து பணியாற்றினார்.
கீழடி அகழாய்வின் வாயிலாகத் தமிழர்களின் வைகை ஆற்று நாகரிகம் ஏறத்தாழ 2500 ஆண்டுகள் முதல் 3000 ஆண்டுகள் வரை பழமையானது என்பது தெளிவாகிறது. இது வெறும் கருத்துரீதியான தகவல் அல்ல. கீழடி அகழாய்வில் கிடைத்த பொருள்களை வகைப்படுத்தி உள்நாட்டிலும் - உலகளவிலும் உள்ள சிறந்த ஆய்வுக்கூடங்களான புனே, பெங்களூரு, அமெரிக்காவின் புளோரிடா மற்றும் இத்தாலி ஆகியவற்றுக்கு அனுப்பி அங்கு ராயல் டெஸ்டிங், கெமிக்கல் டெஸ்டிங், கார்பன் டேட்டிங் உள்ளிட்ட ஆய்வுகளை மேற்கொண்டு அறிவியல்பூர்வமாக முடிவுகள் பெறப்பட்டு, அதனடிப்படையிலேயே 2023-ஆம் ஆண்டு 982 பக்க இறுதி அறிக்கையை அமர்நாத் ராமகிருஷ்ணா சமர்ப்பித்தார்.
இத்தனை ஆய்வுகள், அறிவியல்பூர்வமான முடிவுகள் கிடைக்கப்பெற்றும், கீழடி அகழாய்வு முடிவுகளை வெளியிடாமல் காலந்தாழ்த்தி, தமிழரின் பண்பாட்டுப் பெருமையை மறைக்க நினைக்கும் மத்திய பா.ஜ.க. அரசு, இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இரண்டாண்டுகள் கடந்த நிலையில், கூடுதல் சான்றுகள் தேவை என்று திருப்பியனுப்பியிருக்கிறது. இது தமிழ்ப் பண்பாட்டின் மீதான பா.ஜ.க. அரசின் அப்பட்டமான தாக்குதல்.
தரவுகள் எதுவுமில்லாத கற்பனையான சரஸ்வதி நாகரிகத்தை முன்னிறுத்தி, திராவிடப் பண்பாட்டு அடையாளமான சிந்துவெளி நாகரிகத்தை அழிக்க நினைக்கும் பா.ஜ.க. இதுவரை சரஸ்வதி நாகரிகத்தை எந்தவித அறிவியல் சோதனைகள் மூலமாகவும் நிரூபிக்கவில்லை. ஆனால், தமிழர் பண்பாட்டு அடையாளமான கீழடி அகழாய்வில் கிடைத்த பொருள்கள் ஒவ்வொன்றும் உலகத் தரத்திலான அறிவியல்பூர்வமான ஆய்வுக்குட்படுத்தப்பட்டு நிரூபிக்கப்பட்டும்கூட அதனை ஏற்பதற்குப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசுக்கு மனது வரவில்லை. அந்தளவுக்குத் தமிழினத்தின் மீதான வெறுப்பு அந்தக் கட்சியின் கொள்கைகளில் ஊறிக் கிடக்கிறது.
அகழாய்வுகள் நடத்தப்பட்டபோது அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்றது. ஆனால், கீழடி அகழாய்வு முடிவுகளை ஏற்க மறுக்கும் மத்திய பா.ஜ.க. அரசின் மொழிவெறி - இனவெறி நடவடிக்கை பற்றி அ.தி.மு.க. இதுவரை வாய் திறக்கவில்லை. அ.தி.மு.க.வை பா.ஜ.க.விடம் அடகுவைத்த பழனிசாமி எப்படி வாய் திறப்பார்? ஏற்கெனவே அவருடைய அமைச்சரவையில் இருந்த ஒருவர், தமிழர் நாகரிகமான கீழடியை ‘பாரத நாகரிகம்‘ என்று பா.ஜ.க. மனம் குளிரும் வகையில் விளம்பியவராயிற்றே!
தமிழ் மொழி – பண்பாடு - தமிழர் பெருமையைப் போற்றிப் பாதுகாப்பதில் எப்போதும் முன்னணியில் நிற்கும் தி.மு.க. ஆட்சியில்தான் கீழடியில் அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டு, அகழாய்வில் கிடைத்த பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. தொன்மை மிக்க தமிழ்ப் பண்பாட்டின் அடையாளங்களை அறிவியல் தொழில்நுட்ப உதவியுடன் இன்றைய தலைமுறையினர் எளிதாகத் தெரிந்துகொள்ளும் வகையில் கீழடி அருங்காட்சியகம் திகழ்கிறது.
தமிழ்ப் பண்பாட்டின் காலம் 5300 ஆண்டுகளுக்கு முந்தைய தொன்மை கொண்டதாக இருப்பதை இரும்பின் தொன்மை என்ற பன்னாட்டுத் தரத்திலான ஆய்வுகள் வாயிலாக நிரூபித்துள்ளோம். வரலாற்றுப் பெருமை மிக்க அந்த ஆய்வு முடிவுகளை திராவிட மாடல் அரசு வெளியிட்டது. தமிழ்நாடு இந்தியாவில்தான் இருக்கிறது. தமிழ்மொழி இந்திய அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இருக்கிறது. தமிழர்கள் இந்திய குடிமக்களாக வாழ்கிறார்கள். ஆனால், தமிழ்ப் பண்பாட்டின் பெருமைக்குரிய இரும்பின் தொன்மை முடிவுகள் குறித்து ஒரு ‘ட்வீட்’ போடக் கூட பிரதமர் தொடங்கி பா.ஜ.க. ஆட்சியினருக்கு மனம் வரவில்லை. தமிழ்நாடு பா.ஜ.க. வினரும் தங்கள் இன - மொழி உணர்வைப் பதவிக்காகத் தலைமையிடம் விற்றுவிட்டு, தமிழர்களுக்கு துரோகம் இழைத்து வருகிறார்கள்.
இந்த நிலையில், தமிழ்ப் பண்பாட்டின் பெருமையைக் காக்கவும், அதை நிறுவவும் வேண்டிய பெரும் பொறுப்பு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், தமிழுணர்வுகொண்ட அதன் தோழமை சக்திகளுக்கும் மட்டுமே இருப்பதால்தான், கிளம்பிற்று காண் தமிழர் கூட்டம் என்கிற வகையில் கழக மாணவரணி மதுரையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தி, கீழடி ஆய்வு முடிவுகளை மத்திய அரசு ஏற்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், தி.மு.க. பாராளுமன்ற மாநிலங்களவைக் குழுத் தலைவருமான திருச்சி சிவா இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆற்றியுள்ள உணர்ச்சிமிகு எழுச்சியுரை, களம் நோக்கி பாயும் ஏவுகணைகளாக மாணவப் பட்டாளத்தை ஆயத்தமாக்கியுள்ளது. மாணவப் பருவத்திலேயே கழகத்தில் ஒப்படைத்துக்கொண்டு, கழக மாணவரணிச் செயலாளராகவும் செயலாற்றியவராயிற்றே அவர். கீழடியிலும் சென்னையிலும் ஒலித்திருப்பது முதல் கட்ட முழக்கம். இது டெல்லி வரை தொடர்ந்து எதிரொலிக்கும். தமிழரின் பண்பாட்டுப் பெருமையை நிலைநாட்டும் வரை கழகத்தின் போராட்டம் ஓயவே ஓயாது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-06-2025.
19 Jun 2025 -
ஈரானின் உச்ச தலைவரை குறிவைத்தால்...ஈராக் ஷியா மதகுரு எச்சரிக்கை
19 Jun 2025ஈரான்: ஈரானில் உயர் தவைர் அயதுல்லா அலி கமேனியை குறிவைப்பதற்கு எதிராக ஈராக்கின் ஷியா பிரிவின் மதகுரு எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
எனது கருத்தியல் உடன்பிறப்புக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்: முதல்வர்
19 Jun 2025சென்னை, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு மின்சாரம், குடிநீர் இணைப்பு கொடுத்தது எப்படி? சென்னை ஐகோர்ட் கேள்வி
19 Jun 2025சென்னை, நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு கொடுத்தது எப்படி என விளக்கம் அளிக்க தாம்பரம் மாநகராட்சி ஆணையர், மின்சார வாரியத
-
சாலை விபத்தில் முசிறி வருவாய் கோட்டாட்சியர் பலி
19 Jun 2025திருச்சி, திருச்சி முக்கொம்பு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆராவமுத தேவசேனா உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ்நாட்டின் மீது உலக நாடுகள் அதிக நம்பிக்கை: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
19 Jun 2025சென்னை, திராவிட மாடல் ஆட்சியில் தொழில்துறை மாபெரும் வளர்ச்சி அடைந்துள்ளது என்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச இயந்திர கண்காட்சியை தொடங்கி வைத்து பெருமி
-
பா.ம.க., பிரச்னையில் தி.மு.க. தலையீடா..? அப்பட்டமான பொய் என்கிறார் ராமதாஸ்
19 Jun 2025சென்னை, பா.ம.க., பிரச்னையில் தி.மு.க., தலையிடுவதாக அன்புமணி விமர்சனம் செய்துள்ளது அப்பட்டமான பொய் என ராமதாஸ் பதில் அளித்தார்.
-
தங்கம் விலை ரூ.520 உயர்வு
19 Jun 2025சென்னை, தமிழகத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 9,200 ரூபாய்க்கும்; சவரன், 73,600 ரூபாய்க்கும் விற்பனையானது.
-
ஈரான்-இஸ்ரேல் மோதலில் மத்தியஸ்தம் செய்ய தயார் ரஷ்ய அதிபர் புதின் அறிவிப்பு
19 Jun 2025மாஸ்கோ: ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான பரஸ்பர தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக இரு தரப்பினருக்கும் இடையே மத்தியஸ்தம் செய்துவைக்கத் தயாராக இருப்பதாக புதின்
-
ராபர்ட் புரூஸுக்கு எதிரான தேர்தல் வழக்கில் நயினார் நாகேந்திரன் ஆஜர்
19 Jun 2025சென்னை: திருநெல்வேலி தொகுதி எம்.பி ராபர்ட் புரூஸ் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கில், பா.ஜ.க.
-
த.வெ.க. மருத்துவர் அணி புதிய பொறுப்பாளர்கள் நியமனம்
19 Jun 2025சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தில் மருத்துவர் அணிக்கு புதிய பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.
-
சட்டவிரோத பணக்குவியல் விவகாரம்: நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பணிநீக்கம் செய்ய விசாரணைக்குழு பரிந்துரை
19 Jun 2025புதுடில்லி, வீட்டில் சட்டவிரோதமாக பணக்குவியல்களை மறைத்து வைத்த விவகாரத்தில் நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பணிநீக்கம் செய்யுமாறு விசாரணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.
-
ஏ.டி.ஜி.பி. ஜெயராமுக்கு எதிரான கைது உத்தரவை ரத்து செய்தது சுப்ரீம் கோர்ட்
19 Jun 2025புதுடில்லி, ஆள்கடத்தல் விவகாரத்தில் ஏ.டி.ஜி.பி., ஜெயராமை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சுப்ரீம் கோர்ட்ரத்து செய்தது.
-
தி.மு.க.வில் கூடுதலாக உறுப்பினர் சேர்க்கும் பணி: வருகிற 25 - ம் தேதி தொடங்கி வைகிறார் முதல்வர் ஸ்டாலின்
19 Jun 2025சென்னை, தி.மு.க.வில் 30 சதவீதம் கூடுதல் உறுப்பினர் சேர்க்கும் பணியை வருகிற 25-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
-
சட்டவிரோத குடியேற்றம்; திருப்பூரில் 26 வங்கதேசத்தினர் கைது
19 Jun 2025திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் சட்டவிரோதமாக, போலி ஆவணங்களை பயன்படுத்தி வசித்து வந்த வங்கதேசத்தினர் 26 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
தமிழ்ப் பண்பாட்டின் பெருமையை மறைக்க முயற்சி: கீழடி விவகாரத்தில் மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
19 Jun 2025சென்னை, தமிழ் என்றால் கசப்புடனும், தமிழர்கள் என்றால் வெறுப்புடனும் பார்க்கக் கூடிய மத்திய பா.ஜ.க.
-
பா.ம.க. எம்.எல்.ஏ.,க்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வோம்: பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி பேச்சு
19 Jun 2025சேலம், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள பா.ம.க., எம்.எல்.ஏ.,க்கள் 2 பேர் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் குணமடைய பிரார்த்தனை செய்வோம்' என பா.ம.க., தலைவர் அன்புமணி
-
ஆங்கிலத்தில் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள்: அமித்ஷா உறுதி
19 Jun 2025புதுடில்லி, '' நமது நாட்டில் ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கப்படுவார்கள். இது போன்ற சமூகம் விரைவில் உருவாகும், '' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
-
வரும் ஜூன் 24, 25-ம் தேதிகளில் அ.இ.அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
19 Jun 2025சென்னை: வரும் 24, 25 ஆகிய நாட்களில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
-
பாலத்தில் தவறி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ. 30 லட்சம் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
19 Jun 2025சென்னை, வல்லநாடு தாமிரபரணி ஆற்று பாலத்தில் தவறி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிவாரண நிதி வழங்கிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
-
இந்தியா-பாக். போர் நிறுத்தத்துக்கு இரு நாட்டு தலைவர்களே காரணம் முதல் முறையாக டிரம்ப் ஒப்புதல்
19 Jun 2025வாஷிங்டன்: “இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த 2 தலைவர்கள் தான், இரு நாடுகளுக்கு இடையே நிகழ்ந்த மோதலை நிறுத்தினார்கள்.” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முதல்மு
-
உலகின் முன்னணி பல்கலை., பட்டியல்: சென்னை ஐ.ஐ.டி.க்கு 180-வது இடம்: பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
19 Jun 2025புதுடில்லி, உலக பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் இந்தியாவை சேர்ந்த 54 கல்வி நிறுவனங்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன. சென்னை ஐ.ஐ.டி., 180-வது இடத்தை பிடித்
-
கரூரில் போலீஸாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரவுடி சுட்டுப்பிடிப்பு
19 Jun 2025கரூர், கரூரில் கொலை முயற்சி வழக்கில் கைது செய்ய சென்ற போலீஸாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரவுடி சுட்டுப்பிடிக்கப்பட்டார்.
-
இஸ்ரேல் மீது ஏவுகணை வீசி தாக்குதல் நடத்த போவதாக ஈரான் அறிவிப்பு
19 Jun 2025டெஹ்ரான்: இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதாக குற்றம்சாட்டி, கடந்த 13-ந்தேதி ஈரான் மீது இ்ஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது.
-
நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு: டெல்லியில் அவசரமாக தரையிறங்கிய விமானம்
19 Jun 2025புதுடில்லி: 180 பேருடன் பயணித்த இண்டிகோ விமானம், நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் டில்லியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.