முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏ.டி.ஜி.பி. ஜெயராமுக்கு எதிரான கைது உத்தரவை ரத்து செய்தது சுப்ரீம் கோர்ட்

வியாழக்கிழமை, 19 ஜூன் 2025      தமிழகம்
Supreme-Court 2023-04-06

புதுடில்லி, ஆள்கடத்தல் விவகாரத்தில் ஏ.டி.ஜி.பி., ஜெயராமை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சுப்ரீம் கோர்ட்ரத்து செய்தது.  

காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கத்துடன், காதலனின் தம்பியான சிறுவனை கடத்திய வழக்கில்  பூஜை ஜெகன்மூர்த்தி மற்றும் ஏ.டி.ஜி.பி., ஜெயராம் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது, ஏ.டி.ஜி.பி., ஜெயராமை கைது செய்ய நீதிபதி உத்தரவிட்டதுடன், அவரை சஸ்பெண்ட் செய்யவும் உத்தரவிட்டார். இதையடுத்து, போலீஸ் சீருடையிலேயே ஏ.டி.ஜி.பி.யை ஜெயராமை கைது செய்த போலீசார் அவரிடம் 10 மணிநேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினர்.

இதனிடையே,  தன்னை சஸ்பெண்ட் செய்ததை எதிர்த்து ஏ.டி.ஜி.பி., ஜெயராம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்த போது, ஏ.டி.ஜி.பி., பணியிடை நீக்கத்தை திரும்பப் பெறுவது தொடர்பான தமிழக அரசின் நிலைப்பாட்டை கேட்டுச் சொல்ல வேண்டும்' என்று நீதிபதிகள் கூறியிருந்தனர்.

இந்த நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் தலைமையிலான அமர்வில் தமிழக அரசு நேற்று பதில் மனு தாக்கல் செய்தது. அதில், 'சிறுவன் கடத்தல் விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏ.டி.ஜி.பி., ஜெயராம் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையில் எந்த மாற்றமும் இல்லை. வழக்கு விசாரணை நடந்து வருவதால் பணியிடை நீக்கம் என்பது தொடர வேண்டும்,' என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்; ஏ.டி.ஜி.பி., ஜெயராமை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.   இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.,யிடம் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து