முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய அணியில் ஹர்ஷித் ராணா

வியாழக்கிழமை, 19 ஜூன் 2025      விளையாட்டு
rohit

Source: provided

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லீட்சில் இன்றுதொடங்குகிறது. இது 4-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் என்பதால் இரு அணிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அத்துடன் 2007-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்றதில்லை என்ற நிலையை மாற்றுமா? என்று ரசிகர்கள்  ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். இந்த முதல் போட்டிக்கு தயாராகும் இந்திய அணியினர் லீட்சில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியில் கூடுதல் வீரராக வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா சேர்க்கப்பட்டுள்ளார். 

பேட்டை பரிசளித்த ரோகித்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஆயுஷ் மாத்ரேவுக்கு ரோகித் சர்மா தான் கையொப்பமிட்ட பேட்டை பரிசாக கொடுத்தார். இது தொடர்பான புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஆயுஷ் மாத்ரே பகிர்ந்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அறிமுகமான ஆயுஷ் மாத்ரே சிறப்பாக விளையாடினார். இதன்மூலம் இங்கிலாந்துக்கு எதிரான U19 ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணியின் கேப்டனாக ஆயுஷ் மாத்ரே நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கொச்சி அணிக்கு ரூ.538 கோடி 

ஆர்.எஸ்.டபிள்யூ. நிறுவனம், 2011 ஆம் ஆண்டு ஜெயவர்தனே தலைமையில் கொச்சி டஸ்கர்ஸ் கேரள அணியை உருவாக்கியது. ஆனால், ஒப்பந்தத்தின்படி வங்கி உத்தரவாதம் அளிக்காததால், 2012 ஆம் ஆண்டில் பி.சி.சி.ஐ. நிர்வாகம் கொச்சி டஸ்கர்ஸ் அணியை நீக்கியது.

இதற்கு எதிராக ஆர்.எஸ்.டபிள்யூ. நிறுவனம் நடுவர் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. அதில் ரூ.555 கோடி இழப்பீடு கோரப்பட்டது. தற்போது, இந்த வழக்கில் மும்பை உயர்நீதிமன்றம் கொச்சி டஸ்கர்ஸ் அணிக்கு ரூ.538 கோடி வழங்க பி.சி.சி.ஐ.க்கு உத்தரவிட்டுள்ளது. இழப்பீடு வழங்கப்போகிறதா அல்லது இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யபோகிறதா என பி.சி.சி.ஐ. தரப்பு இன்னும் முடிவை அறிவிக்கவில்லை.

ரோகித் சர்மா சாதனை சமன் 

6 அணிகள் பங்கேற்றுள்ள 3-வது மேஜர் லீக் கிரிக்கெட் (எம்.எல்.சி.) போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில்  நடந்த 8-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் வாஷிங்டன் பிரீடம் அணி, லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்சை சந்தித்தது.  முதலில் பேட் செய்த வாஷிங்டன் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 208 ரன்கள் குவித்தது. 6-வது வரிசையில் இறங்கி அதிரடியாக ஆடிய கேப்டன் மேக்ஸ்வெல் 106 ரன்கள் (49 பந்து, 2 பவுண்டரி, 13 சிக்சர்) எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதைத்தொடர்ந்து ஆடிய லாஸ் ஏஞ்சல்ஸ் அணி 16.3 ஓவர்களில் 95 ரன்னில் சுருண்டது. இதனால் வாஷிங்டன் அணி 113 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் மேக்ஸ்வெல் (ஆஸ்திரேலியா) அடித்த 8-வது சதம் இதுவாகும். இதன் மூலம் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் 8 சதங்களுடன் 4-வது இடத்தில் உள்ள ரோகித் சர்மா (இந்தியா), மைக்கேல் கிலின்ஜெர், ஆரோன் பிஞ்ச், டேவிட் வார்னர் (மூவரும் ஆஸ்திரேலியா), ஜோஸ் பட்லர் (இங்கிலாந்து) ஆகியோரின் சாதனையை சமன் செய்தார். c

பயிற்சியின் போது கருண் காயம் 

சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் லீட்சில் உள்ள ஹெடிங்லே மைதானத்தில் இன்று ( 20-ந்தேதி ) தொடங்குகிறது.  இந்த போட்டிக்காக லீட்சில் மைதானத்தில் இந்திய வீரர்கள் தீவிர பயிற்சி ஈடுப்பட்டு வந்தனர். இந்த நிலையில் பயிற்சியின் போது கருண் நாயருக்கு இடுப்பில் காயம் ஏற்பட்டது. பிரசித் கிருஷ்ணா வீசிய பந்தை எதிர் கொண்ட போது பந்து கருண் நாயரின் இடுப்பை தாக்கியது.

இதனால் கருண் நாயர் வலியால் துடித்தார். பிறகு ஒன்று இல்லை என்பது போல மீண்டும் பேட்டிங் செய்தார். பிறகு பேட்டிங்கை முடித்து விட்டு இடுப்பை தடவி கொண்டே வெளியே வந்தார். டிசர்ட்டை எடுத்து பார்த்த போது இடுப்பில் பந்து தடம் அப்படியே பதிந்திருந்தது. அதனை சக வீரர்களிடம் சிரித்தபடி இதோ பார்த்துக்கோ என்பது போல காட்டினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து