முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிபந்தனையற்ற போர்நிறுத்தம்: ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா, சீனாவின் தீர்மானம் நிறைவேறுமா?

திங்கட்கிழமை, 23 ஜூன் 2025      உலகம்
UNO-2023 04 06

தெஹ்ரான், ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தில் இஸ்ரேல் - ஈரான் இடையே உடனடி மற்றும் நிபந்தனையற்ற போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் தீர்மானத்தை ரஷ்யா, சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் முன்மொழிந்தன.  

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்கள் குறித்து விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நியூயார்க்கில் நேற்று முன்தினம் கூடியது. 15 உறுப்பினர்களைக் கொண்ட இந்த அமைப்பின் கூட்டத்தில் உடனடி மற்றும் நிபந்தனையற்ற போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் தீர்மானத்தை ரஷ்யா, சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் முன்மொழிந்தன.

ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட போர் நிறுத்தத்துக்கான வரைவுத் தீர்மானத்தின் மீது எப்போது வாக்களிப்பு நடக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், ரஷ்யா, சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகியவை நேற்று (திங்கட்கிழமை) மாலைக்குள் கவுன்சில் உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளன.

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற குறைந்தபட்சம் ஒன்பது வாக்குகள் ஆதரவாகவும், அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், ரஷ்யா அல்லது சீனாவின் வீட்டோக்கள் இல்லாததாகவும் இருக்க வேண்டும். இந்த வரைவுத் தீர்மானத்தை அமெரிக்கா எதிர்க்கும் என்று தெரிகிறது. எனவே இந்த தீர்மானம் நிறைவேறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து