முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நயினார் நாகேந்திரன் தனது கூட்டணி பிரச்னையை முதலில் தீர்க்கட்டும் : அமைச்சர் கே.என்.நேரு காட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 29 ஜூன் 2025      தமிழகம்
KN-Nehru 2023 04 01

Source: provided

நெல்லை : அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணிக்குள் இருக்கும் பிரச்சனையை சரி செய்துவிட்டு எங்களை பற்றி பேசட்டும் என கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

நெல்லையில் அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: தி.மு.க.வை ஆட்சியில் இருந்து அகற்றுவேன் என சொல்லித்தான் நயினார் நாகேந்திரன் மாநில தலைவராகி உள்ளார். அவர் தலைவராக வருவதற்கு முன் எங்களிடம் என்ன பேசினார் என்பதை பொது வெளியில் சொல்ல முடியாது.அவர்கள் முதலில் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணிக்குள் இருக்கும் பிரச்சனையை சரி செய்துவிட்டு கூட்டணி ஆட்சியா? தனித்து ஆட்சி அமைப்பார்களா? என்பதை முடிவு செய்துவிட்டு எங்களை பற்றி பேசட்டும்.

வருகிற 8-ந்தேதி நடைபெறும் நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்திற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிதலமடைந்த சாலைகளை செப்பனிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிறப்பான முறையில் இந்த ஆண்டு தேரோட்டம் நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து