Idhayam Matrimony

வைபவ் சூர்யவன்ஷி அபார ஆட்டம்: இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி வெற்றி

வியாழக்கிழமை, 3 ஜூலை 2025      விளையாட்டு
3-Ram-51

Source: provided

நார்த்தம்டான்: வைபவ் சூர்யவன்ஷி  அபார ஆட்டத்தால் இங்கிலாந்தை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்  வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.

சமநிலையில்...

இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணி (19 வயதுக்குட்பட்டோர்) இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. அதன்படி நடைபெற்ற முதல் 2 போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்ற நிலையில் தொடர் 1-1 என்ற கணக்கில்  சமநிலையில் இருந்தது.

வலுவான அடித்தளம்... 

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது ஒருநாள் போட்டி நார்த்தம்டானில் நேற்று முன்தினம் நடைபெற்றது. மழை காரணமாக 40 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஆயுஷ் மாத்ரே பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி அதிரடியாக விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன பிஜே டாகின்ஸ் 62 ரன்களும், ஐசக் முகமது 42 ரன்களும் அடித்து அணிக்கு வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தனர். இறுதி கட்டத்தில் கேப்டன் தாமஸ் ரியூ அதிரடியாக விளையாடி 76 ரன்கள் (44 பந்துகள்) அடிக்க இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 40 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 268 ரன்கள் குவித்தது. இந்தியா தரப்பில் கனிஷ்க் சவுகான் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

20 பந்துகளில் அரைசதம்....

இதனையடுத்து 269 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக வைபவ் சூர்யவன்ஷி-ஆயுஷ் மாத்ரே களமிறங்கினர். இதில் ஆயுஷ் மாத்ரே 12 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். இருப்பினும் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஆன வைபவ் சூர்யவன்ஷி இங்கிலாந்து பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். வெறும் 20 பந்துகளில் அரைசதமடித்து அசத்தினார்.

அபார வெற்றி... 

ருத்ரதாண்டவம் ஆடிய அவர் வெறும் 31 பந்துகளில் 9 சிக்சர்கள் 6 பவுண்டரிகள் உள்பட 86 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த விஹான் மல்கோத்ரா 46 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்வரிசையில் கனிஷ்க் சவுகான் (43 ரன்கள்), ஆம்ப்ரிஷ் (31 ரன்கள்) ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வெறும் 34.3 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 274 ரன்கள் அடித்து அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து