முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யுவராஜ் சிங் மீண்டும் கேப்டன்

வெள்ளிக்கிழமை, 4 ஜூலை 2025      விளையாட்டு
Yuvraj-Singh 2024-08-20

Source: provided

ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கும் 2-வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் லீக் தொடர் வரும் 18-ம் தேதி தொடங்க உள்ளது. இதில் நடப்பு சாம்பியன் இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 6 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. இதில் நடப்பு சாம்பியனான இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பரம எதிரியான பாகிஸ்தானை 20-ம் தேதி எதிர்கொள்கிறது. அதன்பின் 22-ம் தேதி தென் ஆப்பிரிக்காவையும், 26-ம் தேதி ஆஸ்திரேலியாவையும், 27-ம் தேதி இங்கிலாந்தையும், 29-ம் தேதி வெஸ்ட் இண்டீசையும் எதிர்கொள்கிறது.

இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. யுவராஜ் சிங் தலைமையிலான அந்த அணியில் ஷிகர் தவான், சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் போன்ற நடத்திர வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்திய அணி : யுவராஜ் சிங் (கேப்டன்), ஷிகர் தவான், ராபின் உத்தப்பா, அம்பதி ராயுடு, சுரேஷ் ரெய்னா, இர்பான் பதான், யூசுப் பதான், ஹர்பஜன் சிங், பியூஷ் சாவ்லா, ஸ்டூவர்ட் பின்னி, குர்கீரத் மான், வினய் குமார், சித்தார்த் கவுல், வருண் ஆரோன், அபிமன்யூ மிதுன் மற்றும் பவான் நெகி.

___________________________________________________________________________________________________________________

பியூ வெப்ஸ்டர் அசத்தல்

பார்டர்-கவாஸ்கர் தொடரில் 5-ஆவது போட்டியில் ஆஸி. அணிக்காக அறிமுகமானார் பியூ வெப்ஸ்டர். 31 வயதாகும் இவர் முதல்தர கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடியதால் ஆஸி. அணியில் இடம் கிடைத்தது. முதல் போட்டியில் முதல் இன்னிங்ஸிலேயே அரைசதம் அடித்து அசத்தினார். மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக அணியில் இடம்பிடித்த இவர் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி வருகிறார்.

ஆஸி. அணி தற்போது மேற்கிந்தியத் தீவுகள் அணியுடன் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட்டிலும் அரைசதம் அடித்த வெப்ஸ்டர், இரண்டாவது டெஸ்ட்டில் 100 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகள் இழந்த நிலையில் நிதானமாக விளையாடி அரைசதம் அடித்தார். 6 போட்டிகளில், குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால் 9 இன்னிங்ஸ்களில் 4 அரைசதங்களை அடித்து அசத்தியுள்ளார். பியூ வெப்ஸ்டர் 57, 39, 23, 31, 72, 9, 11, 63, 60 என சிறப்பாக விளையாடியுள்ளார். சராசரி 45.63ஆக இருக்கிறது. பந்துவீச்சில் வெப்ஸ்டர் 5 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். டெஸ்ட்டில் ஒரு நல்ல ஆல்-ரவுண்டராக மிளிரும் வெப்ஸ்டருக்கு ஆஸி. ரசிகர்களிடையே வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

___________________________________________________________________________________________________________________

டெஸ்ட் தொடருக்கு சிக்கல்?

இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.  இந்த தொடர் நிறைவடைந்ததும் இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் அடுத்த மாதம் 17ம் தேதி தொடங்குகிறது.

இந்நிலையில், தற்போது வங்காளதேசத்தில் நிலவி வரும் அரசியல் சூழல் காரணமாக இந்திய அணி வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான அறிவிப்பை பி.சி.சி.ஐ., வங்காளதேச கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமோ, வங்காளதேச கிரிக்கெட் வாரியமோ இதுதொடர்பான அறிவிப்பை இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. எனினும், இந்த தொடரின் ஒளிபரப்பு உரிமைகள் விற்பனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்திய அணி, வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதில் சிக்கல் நிலவுகிறது.

___________________________________________________________________________________________________________________

ஜடேஜாவுக்கு சிறப்பு அனுமதி 

இந்தியா- இங்கிலாந்து இடையிலான 2ஆவது டெஸ்ட் பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 587 ரன்கள் குவித்தது. இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் இரட்டை சதம் (269) விளாசினார்.  இந்திய அணி வீரர்கள் இணைந்து மொத்தமாகத்தான் ஓட்டலில் இருந்து மைதானத்திற்கு வர வேண்டும் என்பது பி.சி.சி.ஐ.-யின் விதிமுறையில் உள்ளது. ஆனால், ஜடேஜா மட்டும் முன்னதாக மைதானத்திற்கு வர அணி நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதற்கு காரணம் பந்து புதியதாக இருந்ததால், நீண்ட நேரம் பயிற்சி மேற்கொண்டால் சந்திக்க எளிதாக இருக்கும் என்பதால் முன்கூட்டியே வந்து பயிற்சி மேற்கொண்டதுதான்.

இதுகுறித்து ஜடேஜா கூறியதாவது:- முன்னதாக மைதானத்திற்கு சென்று கூடுதலாக பேட்டிங் செய்தேன். ஏனென்றால், நான் 2ஆவது நாளில் கூடுதலாக பேட்டிங் செய்ய வேண்டும் என்பதால். ஏனென்றால், பந்து புதிதாக இருந்தது. நியூ பால்-ஐ பார்க்க முடியும் என்றால், இன்னிங்சில் தொடர்ந்து விளையாட அது எளிதாக இருக்கும். இங்கிலாந்தை பொறுத்தவரை நாம் அதிக ரன்கள் அடித்து செட் ஆகிவிட்டோம் என நினைக்க முடியாது. பந்து எந்த நேரத்தில் ஸ்விங் ஆகி எட்ஜ் ஆகும். இவ்வாறு ஜடேஜா தெரிவித்தார்.

___________________________________________________________________________________________________________________

ஆஸி. 286 ரன்களுக்கு ஆல் அவுட்

ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கிரெனடாவில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி வெஸ்ட் இண்டீசின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. 110 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. 

6வது விக்கெட்டுக்கு இணைந்த வெப்ஸ்டர், அலெக்ஸ் கேரி ஜோடி பொறுப்புடன் ஆடி 112 ரன்களை சேர்த்தது. இருவரும் அரை சதம் கடந்தனர். அலெக்ஸ் கேரி 63 ரன்னும், வெப்ஸ்டர் 60 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில், முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 286 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அல்ஜாரி ஜோசப் 4 விக்கெட்டும், ஜெய்டன் சீல்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

___________________________________________________________________________________________________________________

சுப்மன் கில்லுக்கு பாராட்டு

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2-வது போட்டி பர்மிங்காமில்  தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.  அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில்  587 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக இந்திய கேப்டன் சுப்மன் கில் 269 ரன்கள் அடித்தார். முன்னதாக இந்த ஆட்டத்தில் இரட்டை சதம் அடித்து அசத்திய இந்திய கேப்டன் சுப்மன் கில்லை பல முன்னாள் வீரர்கள் பாராட்டி வருகின்றனர். அந்த வரிசையில் இந்த தொடருக்கு முன்னதாக சுப்மன் கில்லை விமர்சித்த இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் தற்போது பாராட்டியுள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், "தொடரின் தொடக்கத்தில், அவரது (சுப்மன் கில்) சராசரி 35, அது அவரது தரத்திற்கு போதுமானதாக இல்லை என்று நான் சொன்னேன். இந்தத் தொடரின் முடிவில் அவர் சராசரியாக 45 ரன்களை எடுப்பார் என்று நினைக்கிறேன். அவர் அதனை செய்யாமல் விட மாட்டார். கேப்டனாக சிறப்பாகத் துவங்கியுள்ள அவர் 2 போட்டிகளில் 2 சதங்கள் அடித்துள்ளது அற்புதமானது. 2-வது போட்டியில் சுப்மன் கில் டாஸ் தோற்றது சிறந்தது. கவாஸ்கர் சொன்னது போல சிறந்த கிரிக்கெட் வீரர்கள் ஸ்விங், வேகம் அதிகமாக இல்லாத நல்ல ஆடுகளத்தில் அசத்துவார்கள். அவருடைய கால்கள் நன்றாக நகர்கிறது. அவருடைய டெக்னிக் சிறப்பானதாக இருக்கிறது. இங்கிலாந்தில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற மனநிலையை அவர் கொண்டுள்ளார்" என்று கூறினார்.

___________________________________________________________________________________________________________________

3-வது சுற்றுக்கு சினெர் தகுதி

'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில்  நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் 1 வீரரான ஜானிக் சினெர் (இத்தாலி), அலெக்சாண்டர் வுகிக் (ஆஸ்திரேலியா) உடன் மோதினார்.

இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜானிக் சினெர் 6-1, 6-1 மற்றும் 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். இவர் 3-வது சுற்றில் பெட்ரோ மார்ட்டினஸ் உடன் மோத உள்ளார். 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து