முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2035 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிற்கென்று தனி விண்வெளி நிலையம்: அமைச்சர் ஜிதேந்திர சிங்

வியாழக்கிழமை, 17 ஜூலை 2025      இந்தியா
Jitendra-Singh 2023 04 07

புதுடெல்லி, வரும் 2035 ஆம் ஆண்டுக்குள்  இந்தியாவிற்கென்று ஒரு தனி விண்வெளி நிலையம் அமைக்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது;- "சர்வதேச விண்வெளி நிலையத்தில் சுபான்ஷு சுக்லா மேற்கொண்ட பயணமானது, இந்தியாவின் 'ககன்யான்' உள்ளிட்ட விண்வெளி திட்டங்களுக்கான மதிப்புமிக்க நுண்ணறிவையும், அனுபவத்தையும் அளித்துள்ளது. அடுத்த இந்திய விண்வெளி வீரர் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விண்கலத்தில் பயணிப்பார்.

இந்தியாவின் அடுத்த விண்வெளி திட்டம் முற்றிலும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டதாக இருக்கும். இந்திய விண்வெளி வீரர்கள் முதல் முறையாக ஒரு இந்திய விண்கலத்தில் பயணம் செய்வார்கள். இந்தியாவின் மதிப்பை உயர்த்துவது மட்டுமின்றி, நமது சொந்த விண்வெளி நிலையத்தை அமைப்பது உள்ளிட்ட நமது எதிர்கால முயற்சிகளுக்கும் இது வழிவகுக்கும்.

இந்தியாவிற்கென்று ஒரு தனி விண்வெளி நிலையம் அமைக்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம். 2035 ஆம் ஆண்டுக்குள் இது சாத்தியமாகும். மேலும் அதற்கு 'பாரத் விண்வெளி நிலையம்' என்று பெயரிடவும் முடிவு செய்துள்ளோம். சுபான்ஷு சுக்லாவின் விண்வெளி பயணம் உலகிற்கு ஒரு பெரிய செய்தியை அனுப்பி இருக்கிறது. விண்வெளி துறையை பொறுத்தவரை இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது."

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து