முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்ட்ரல் திரை விமர்சனம்

திங்கட்கிழமை, 21 ஜூலை 2025      சினிமா
Central-Review 2025-07-21

Source: provided

நாயகன் விக்னேஷ், தனது குடும்பத்தை வறுமையில் இருந்து மீட்பதற்காக 12ம் வகுப்பு தேர்வு முடிந்ததும், இரண்டு மாத விடுமுறையில் வேலை செய்ய சென்னைக்கு சென்று அங்கு ஒரு நூற்பாலையில் வேலைக்கு சேருகிறார். தங்க இடம், உணவு, சம்பளம் கிடைத்தாலும் தொழிலாளர்களை கொத்தடிமைகளாக நடத்தும் அந்த நிறுவனத்தின் முதலாளி பேரரசு, சிறிய தவறு செய்தாலும் தொழிலாளர்களை அடிப்பது, எதிர்த்து நின்றால் கொலை செய்வது என்ற கொடூர முகத்தோடு வலம் வருகிறார். படித்து பெரிய ஆளாக வர வேண்டிய விக்னேஷ், குடும்ப வறுமைக்காக இப்படி ஒரு இடத்தில் சிக்கிக்கொள்ள, அங்கிருந்து தப்பித்தாரா?, படித்து நல்ல பணியில் சேர்ந்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை. நாயகனாக நடித்திருக்கும் ‘காக்கா முட்டை’ விக்னேஷ், அப்பாவியான முகம், அளவான நடிப்பு என கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். நாயகி சோனேஷ்வரி விக்னேஷ் மீதான காதல் மற்றும் பிரிவின் வருத்தத்தை கண்கள் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்.  கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியிருக்கும் பாரதி சிவலிங்கம், வறுமையை எதிர்கொண்டு வாழ்க்கையில் போராடிக் கொண்டிருக்கும் மக்களின் வாழ்வியலை எதார்த்தமாக சொல்லியிருக்கிறார். மொத்தத்தில், சென்டரல் தன்னம்பிக்கை கொடுக்கும் படைப்பு. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து