முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தோனேஷியாவில் 280 பேருடன் சென்ற கப்பலில் தீ: 3 பேர் உயிரிழப்பு

ஞாயிற்றுக்கிழமை, 20 ஜூலை 2025      உலகம்
Bote 2023 08 13

Source: provided

ஜகார்த்தா : இந்தோனேஷியாவில் 280க்கும் மேற்பட்டோருடன் சென்ற சொகுசு கப்பலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். 150க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர்.

இந்தோனேஷியாவில் பல தீவுகள் உள்ளன. அதில், மனாடோ-தஹுடா தீவுகளுக்கு இடையே கே எம் பார்சிலோனா விஏ என்ற சொகுசு கப்பல் இயக்கப்படுகிறது. இது அருகில் உள்ள தீவுகளுக்கும் சென்று வருகிறது. மனோடாவில் இருந்து தஹூடா நோக்கி 280க்கும் மேற்பட்டோருடன் இந்த கப்பல் சென்று கொண்டு இருந்தது. திடீரென இந்தக் கப்பலில் தீப்பற்றி எரிந்தது. இதனையடுத்து கப்பலில் இருந்த ஏராளமானோர் உயிர் தப்ப கடலில் குதித்தனர். தகவல் அறிந்த மீட்புப் படையினர் , பேரிடர் கால மீட்பு குழுவினர் உடனடியாக அந்த இடத்துக்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்து காரணமாக கப்பலில் எழுந்த புகை விண்ணை முட்டும் அளவுக்கு இருந்தது.

இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில் 150க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர். மற்றவர்களை மீட்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது. இந்த விபத்து குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து