முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடு வானில் என்ஜினில் தீ: அவசரமாக தரையிறக்கப்பட்ட டெல்டா ஏர்லைன்ஸ் விமானம்

ஞாயிற்றுக்கிழமை, 20 ஜூலை 2025      உலகம்
Air

Source: provided

வாஷிங்டன் : நடுவானில் விமான என்ஜினில் தீப்பிடித்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டெல்டா ஏர் லைன்ஸ் நிறுவன விமானம் ஒன்று அட்லாண்டாவுக்கு புறப்பட்டது. போயிங் ரக விமானமான அது புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஒரு என்ஜினில் தீப்பிடித்தது. விமானத்தின் இடது என்ஜினில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதை கவனித்த விமானி உடனே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதனால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. விமானத்தில் பயணிகள் கடும் பீதியடைந்தனர்.

என்ஜினில் தீப்பிடித்ததால் விமானத்தை அவசரமாக திரும்பி லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் விமானி பத்திரமாக தரையிறங்கினார். அங்கு தயார் நிலையில் இருந்த அவசரகால குழுவினர் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர். விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். பயணிகள் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. நடுவானில் விமான என்ஜினில் தீப்பிடித்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து