முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கெவி திரை விமர்சனம்

செவ்வாய்க்கிழமை, 22 ஜூலை 2025      சினிமா
Kevi-Review 2025-07-22

Source: provided

அடிப்படை வசதி இல்லாத ஒரு மலை கிராமத்தில் நாயகன் ஆதவன் தனது கர்ப்பினி மனைவியுடன் வாழ்ந்து வருகிறான். அவனுக்கும் அங்குள்ள வனத்துறை அதிகாரிகளுக்கும் பிரச்சனை உருவாகிறது. ஒரு நாள் அவனது மனைவிக்கு பிரசவ வலி ஏற்படுகிறது. அதே நேரம் வனத்துறை காவலர்களிடம் சிக்கி நாயகன் உயிருக்கு போராட, மறுபக்கம் அவரது மனைவியையும், குழந்தையையும் காப்பாற்ற கிராம மக்கள் போராடுகிறார்கள், இறுதியில் இவர்களது போராட்டம் என்ன ஆனது? என்பதை வலி மிகுந்த வாழ்க்கையை சொல்வதே ‘கெவி’. கதையின் நாயகன் ஆதவன், சிறப்பாகவும் நடித்திருக்கிறார். வனத்துறை காவலர்களிடம் சிக்கிக்கொண்டு உயிருக்கு போராடும் காட்சியில் கலங்கடித்து விடுகிறார். நடிப்பில் கண்கலங்க வைத்து விடுகிறார். ஜாக்குலின், சார்லஸ் வினோத், காயத்ரி என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள். தற்போதைய நவீன கால கட்டத்திலும், மருத்துவம் மற்றும் சாலை வசதி இல்லாத கிராமங்களில் வாழும் மக்களின் வலியை எதார்த்தமாக காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குநர் தமிழ் தயாளன், அந்த மக்களை தேர்தல் நேரத்தில் மட்டுமே சந்திக்கும் ஆட்சியாளர்கள் பற்றி விளாசி இருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து