முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறுமி பாலியல் வழக்கு: வாலிபருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்

ஞாயிற்றுக்கிழமை, 27 ஜூலை 2025      தமிழகம்
Jail 2025-07-27

Source: provided

திருவள்ளூர் : சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவனுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விடுக்கப்பட்டுள்ளது. 

கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வடமாநில வாலிபர் ராஜு விஸ்வகர்மா என்ற நபரை 15 தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் சூலூர்பேட்டை ரெயில் நிலையத்தில் வடமாநில வாலிபரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

இதைதொடர்ந்து, ஆரம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் பொதுமக்கள் குவிந்ததால் கைதான வாலிபரை போலீசார் நேற்று கவரப்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு விடிய விடிய அவனிடம் விசாரணை நடத்தப்பட்டது. நேற்று 2-வது நாளாக அவனிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

அவனிடம் விசாரணை நடத்தி முடித்த நிலையில் அவனை கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் முடிவு செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்கு முன்பு அந்த வாலிபருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. மருத்துவ பரிசோதனை முடிந்த நிலையில், அவனை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

இந்நிலையில், சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவனுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ராஜு விஸ்வகர்மாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க பூவிருந்தவல்லி போக்சோ நீதிமன்ற நீதிபதி உத்தரவிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து