முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கார்கேவிடம் மன்னிப்பு கேட்ட ஜே.பி.நட்டா

புதன்கிழமை, 30 ஜூலை 2025      இந்தியா
JP-Natta 2023-09-12

புதுடெல்லி, கார்கேவிடம்  ஜே.பி. நட்டா மன்னிப்பு கேட்டார்.

நாடாளுமன்ற மாநிலங்களவையில், பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் ஆகியவை குறித்த விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஒரு மணி நேரம் பேசினார். அவர் பிரதமர் மோடி குறித்து சில குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்.  அவர் பேசி முடித்தவுடன் எழுந்த அவை முன்னவரும், மத்திய மந்திரியுமான ஜே.பி.நட்டா, கார்கேவுக்கு மனநிலை பிறழ்ந்து விட்டதாக ஆவேசமாக தெரிவித்தார். உணர்ச்சி வேகத்தில், பிரதமர் மோடியை விமர்சித்து பேசிய அவரது வார்த்தைகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

ஜே.பி.நட்டா பேசிய பிறகு எழுந்த கார்கே, ஜே.பி.நட்டா தன்னை மனநிலை சரியில்லாதவர் என்று குறிப்பிட்டது வருத்தமளிப்பதாகக் கூறினார். தற்போதுள்ள பாஜக அரசில் தான் மதிக்கும் ஒரு சில அமைச்சர்களில் நட்டாவும் ஒருவர் என்றும், அவரே இப்படிப் பேசியது வெட்கக்கேடானது என்றும் குறிப்பிட்டார். நட்டாவின் பேச்சுக்கு எதிர்க்கட்சி எம்.பி.க் களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மன்னிப்பு கேட்குமாறு கோரினர். பின்னர், ஜே.பி.நட்டா மன்னிப்பு கோரினார். 

இதுதொடர்பாக அவர் கூறுகையில், "என் வார்த்தைகளை ஏற்கனவே திரும்ப பெற்று விட்டேன். பிரதமர் மோடி, உலகம் முழுவதும் பிரபலமான தலைவர். அது பா.ஜனதாவுக்கு மட்டுமின்றி, நாட்டுக்கே பெருமை. ஆனால் அந்த பெருமையை பற்றி கருதாமல், கார்கே பேசியது ஆட்சேபனைக்குரியது. இருப்பினும், எனது வார்த்தைகள் அவரை காயப்படுத்தி இருந்தால், நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அதே சமயத்தில், கார்கே வரம்பு மீறி பேசியதை நீக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து