முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலஸ்தீன் தனி நாடாக அங்கீகாரம்: 15 மேற்குலக நாடுகள் வலியுறுத்தல்

புதன்கிழமை, 30 ஜூலை 2025      உலகம்
Palestine-2025-07-30

பாலஸ்தீன், பாலஸ்தீனம் தனி நாடாக அங்கீகரிக்கப்பட வேண்டுமென, பிரான்ஸ் உள்ளிட்ட 15 மேற்குலக நாடுகள் திட்டமிட்டு, அவர்களுடன் மீதமுள்ள உலக நாடுகளின் அரசுகளும் இணைய வேண்டுமென வலியுறுத்தியுள்ளன.

மேற்கு கரை மற்றும் காஸா நகரத்தின் மீதான, இஸ்ரேலின் தாக்குதல்களினாலும், உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகள் முடக்கப்பட்டுள்ளதாலும், ஏராளமான பாலஸ்தீனர்கள் பலியாகி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பாலஸ்தீனம் தனி நாடாக அங்கீகரிக்கப்பட வேண்டுமென, சர்வதேச அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. 

இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் பிரான்ஸ் மற்றும் சவுதி அரேபியா தலைமையில் நடைபெற்ற மாநாட்டில், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையில் மீண்டும் இருநாட்டு தீர்வு கொண்டுவரப்பட வேண்டுமென முடிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, பிரான்ஸ் உள்ளிட்ட 15 நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் நேற்று முன்தினம் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், அவர்கள் முடிவு செய்த தீர்மானங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன.

மேலும், அந்த அறிக்கையில், ஸ்பெயின், நார்வே, ஃபின்லாந்து ஆகிய 15 நாடுகளின் அரசுகள், இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையில் இருநாட்டு தீர்வுகள் கொண்டுவர உறுதியாகவுள்ளதாகக் கூறியுள்ளன. இதுகுறித்து, பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர், ஜீன் நோயல் பார்ரொட் தனது எக்ஸ் தளத்தில் கூறுகையில், பிரான்ஸ் உள்பட 15 நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க விரும்புவதாகவும், இதில், இதுவரை இணையாத மற்ற நாடுகளும், தங்களுடன் இணைய அழைப்பதாகவும், அவர் பதிவிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து