எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செல்லும் 19 வயதுக்குள்பட்டோருக்கான இந்திய அணி 2 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தத் தொடரில் போட்டிகள் பிரிஸ்பேன் மற்றும் மேக்கேயில் நடைபெறுகின்றன. இந்த தொடருக்கான இந்திய அணி புதன்கிழமை அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் இங்கிலாந்துக்கு எதிராக அதிவேக சதம் விளாசி சாதனை படைத்து அசத்திய 14 வயதான இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அணியின் கேப்டனாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஆயுஷ் மாத்ரே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். செப்டம்பர் 21 ஆம் தேதி தொடங்கும் இந்தத் தொடர் அக்டோபர் 10 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்திய அணி விவரம்: ஆயுஷ் மாத்ரே (கேப்டன்), விஹான் மல்ஹோத்ரா (விக்கெட் கீப்பர்), வைபவ் சூரியவன்ஷி, வேதாந்த் திரிவேதி, ராகுல் குமார், அபிக்யான் குண்டு (விக்கெட் கீப்பர்), ஹர்வன்ஷ் சிங் (விக்கெட் கீப்பர்), ஆர்.எஸ். அம்ப்ரிஷ், கனிஷ்க் சௌஹான், நமன் புஷ்பக், ஹெனில் சிங், தீபேஷ், கிஷன் குமார், அன்மோல்ஜீத் சிங், கிலன் பட்டேல், உதவ் மோகன், அமன் சௌகான்.
உழைத்தால் வெற்றி: கில்
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி போட்டி லண்டனின் ஓவல் மைதானத்தில் நேற்று (ஜூலை 31) துவங்கியது. இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக சிறிது நேரம் மழை பெய்ந்ததால் போட்டி தாமதமானது. இங்கிலாந்து அணியின் கேப்டன் ஆலி போப் டாஸ் வென்றதும் முதலில் பந்துவீசுவதாகத் தெரிவித்தார். இந்தத் தொடரில் 2-1 இங்கிலாந்து முன்னிலை வகிக்க, இந்தப் போட்டியில் இந்தியா வென்று சமனில் முடிக்க முனைப்பில் இருக்கிறது.
தொடர்ச்சியாக டாஸில் தோற்றது குறித்து இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் பேசியதாவது: நாங்கள் போட்டியில் வெல்லும்வரை டாஸில் தோற்பதை பெரிதாக கண்டுக்கொள்ள மாட்டோம். நேற்று பிளேயிங் லெவன் குறித்து அதிகமாக சிந்தித்தேன். மேகமூட்டமாக இருப்பதால் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்குமென நினைக்கிறேன். முதல் இன்னிங்ஸில் ரன்கள் குவிக்க நினைக்கிறோம். விளையாடும் எல்லா போட்டிகளையும் வெல்ல நினைக்கிறோம். அருகில் வருகிறோம். இன்னும் 5-10 சதவிகிதம் கூடுதலாக உழைத்தால் வெற்றி பெறுவோம். அதை வீரர்கள் அளிப்பார்கள் என்றார்.
5-வது டெஸ்ட் முக்கியம்: துருவ்
வெளிநாடுகளில் விளையாடுவது எப்போதும் சவலான என இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்டருமான துருவ் ஜுரெல் கூறியுள்ளார். ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபியில் இங்கிலாந்து 2-1 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. கடைசி டெஸ்ட் போட்டி நேற்று (ஜூலை 31) மதியம் தொடங்குகிறது. இதில் வென்றால் இந்திய அணி தொடரை 2-2 என சமன்செய்ய முடியும். ரிஷப் பந்த் காயம் காரணமாக வெளியேறியதால் துருவ் கீப்பராக செயல்படுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: வெளிநாடுகளில் விளையாடும்போது சவால்களை கடப்பது எப்போதும் சிறப்பான விஷயமாகும். வெளிநாடுகளில் சிறப்பாக விளையாடும்போது மக்கள் நம்மை பெரிதாக மதிப்பிடுவார்கள். அதனால், நான் மிகுந்த ஆர்வத்தில் இருக்கிறேன். களத்துக்குச் சென்று என்னை வெளிப்படுத்த வேண்டும் என்பது மட்டுமே என்னுடைய யோசனையாக இருக்கிறது. இந்தப் போட்டி முக்கியமானது. அதனால், என்னால் முடிந்த பங்களிப்பை அளிக்க ஆர்வமாக இருக்கிறேன் என்றார். துருவ் ஜுரெல் 4 டெஸ்ட் போட்டிகளில் 202 ரன்கள் எடுத்துள்ளார். தமிழக வீரர் என்.ஜெகதீசன் மாற்றுவீரராக அணியில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
கம்பேக் தரும் ஜிம்பாப்வே வீரர்
நியூசிலாந்து அணி ஜிம்பாப்வே நாட்டுக்குச் சுற்றுப் பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதன் முதல் போட்டி நடைபெற்று வருகிறது. இரண்டாவது டெஸ்ட்டில் பிரண்டன் டெய்லர் அணியில் இணையவிருக்கிறார். ஐ.சி.சி.யின் ஊழல் மற்றும் ஊக்கமருந்து தடையின்படி 3.5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டார். கடந்த 2019-இல் ஸ்பாட்பிக்ஸில் ஈடுபட்ட இவருக்கு 2022-இல் தடைவிதிக்கப்பட்டது.
இதுமட்டுமில்லாமல் போதைப்பொருளை உட்கொண்டதால் இவருக்கு 2019-இல் 15,000 அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. 34 டெஸ்ட் போட்டிகளில் 2,320 ரன்கள் எடுத்துள்ளார். கடைசி டெஸ்ட் போட்டிகளில் 92, 81, 49 ரன்கள் என சிறப்பான ஃபார்மில் இருந்தார். கடினமாக உழைத்து மீண்டும் கம்பேக் அளித்திருப்பதாக அவர் கூறியுள்ளார். 205 ஒருநாள் போட்டிகளில் 6,684 ரன்கள் எடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இறுதிக்கு முன்னேறியது பாக்.
இங்கிலாந்தில் முன்னாள் வீரர்களுக்கான உலக லெஜண்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகின்றது. இந்த தொடரின் லீக் ஆட்டத்திலேயே பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இருந்து விலகுவதாக ரெய்னா, தவான், ஹர்பஜன் சிங் உள்ளிட்டோர் அறிவித்தனர். இதனால், அந்த போட்டி கைவிடப்பட்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் பாகிஸ்தானுக்கும் நான்காம் இடத்தில் இருக்கும் இந்தியாவுக்கும் இடையே நேற்று அரையிறுதிப் போட்டி நடைபெறவிருந்தது. ஆனால், இந்திய அணியின் வீரர்கள் விளையாட மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், இந்தியாவின் முடிவை மதித்து போட்டியை கைவிடுவதாக போட்டியின் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். அதேபோல், பாகிஸ்தான் அணி விளையாடத் தயாராக இருந்ததால், அவர்கள் நேரடியாக இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்தாண்டு நடைபெறவுள்ள ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் விளையாடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 5 days ago |
-
திருவண்ணாமலையில் ரூ.37 கோடியில் மினி டைடல் பூங்கா; முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
01 Aug 2025சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் சார்பில் திருவண்ணாமலையில் ரூ.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-08-2025.
01 Aug 2025 -
ஒகேனக்கல் காவிரியில் பரிசல் இயக்க அனுமதி: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
01 Aug 2025பென்னாகரம் : ஒகேனக்கல் காவிரியில் பரிசல் இயக்க அனுமதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
கூட்டணி அரசு என்ற பேச்சுக்கே இடமில்லை: வைகோ பேட்டி
01 Aug 2025சென்னை, “2026 தேர்தலில் தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். கூட்டணி அரசு என்ற பேச்சுக்கே இடமில்லை” என வைகோ தெரிவித்துள்ளார்.
-
வருகிற 11, 12-ம் தேதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை, திருப்பூர் பயணம்
01 Aug 2025சென்னை : கள ஆய்விற்காக கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு செல்லும் முதல்வர் மு.க.
-
பாலியல் வன்கொடுமை வழக்கில் தேவகவுடா பேரன் குற்றவாளி: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
01 Aug 2025பெங்களூரு, வீட்டுப் பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் முன்னாள் எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்ப
-
டிரம்ப் வரி விதிப்பு விவகாரம்: யு.ஏ.இ., அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு
01 Aug 2025புதுடில்லி : டிரம்ப் வரி விதிப்பு விவகாரம் குறித்து ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் உடன் பிரதமர் மோடி போனில் ஆலோசனை நடத்தினார்.
-
3-ம் கட்ட சுற்றுப்பயணத்தை ஆக. 11-ம் தேதி கிருஷ்ணகிரியில் தொடங்குகிறார் இ.பி.எஸ்.
01 Aug 2025சென்னை, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகிற 11-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை 3-ம் கட்ட சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.
-
பீகார் வரைவு வாக்காளர் பட்டியல்: மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை இல்லாததால் அரசியல் கட்சிகள் அதிர்ச்சி
01 Aug 2025புதுடெல்லி, பீகார் மாநில வரைவு வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
-
அரசு நிகழ்வில் பங்கேற்க ஆட்டோவில் சென்ற சந்திரபாபு
01 Aug 2025கடப்பா : ஆந்திர முதல்வர் சந்திரபாபு அரசு நிகழ்வு ஒன்றில் பங்கேற்க ஆட்டோவில் சென்று அனைவரின் கவனத்தை ஈர்த்தார்.
-
அரசு விளம்பரங்களில் அரசியல் தலைவர்கள் பெயரை பயன்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் தடை
01 Aug 2025சென்னை, அரசு புதிதாக தொடங்க உள்ள, அமலில் உள்ள திட்டங்கள் குறித்த விளம்பரங்களில் அரசியல் தலைவர்களின் பெயரையோ, முன்னாள் முதல்வரின் புகைபடத்தையோ பயன்படுத்தக் கூடாது என சென
-
10 ஆண்டுகளில் இது முதல்முறை: மெட்ரோ ரயிலில் ஜூலை மாதம் மட்டும் 1.03 கோடி பேர் பயணம்
01 Aug 2025சென்னை : ஜூன் மாதத்தை விட ஜூலை மாதத்தில் 11 லட்சத்து 58 ஆயிரத்து 910 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் அதிகம் பயணித்துள்ளனர்.
-
முதல்வரை சந்திக்க நேரம் கேட்கவில்லை: ராமதாஸ்
01 Aug 2025சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்க நேரம் கேட்கவில்லை என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
-
தமிழ்நாடு முழுவதும் 1,256 மருத்தவ முகாம்கள்: 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டம் இன்று தொடக்கம் : சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்
01 Aug 2025சென்னை : 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் தொடங்கி வைக்கிறார்.
-
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைப்பு சென்னை : வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை குறைந்தது.
01 Aug 2025சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே சிலிண்டர் விலையை தீர்மானித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது
-
தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
01 Aug 2025சென்னை : தமிழகத்தில் இன்று முதல் ஆக.7-ம் தேதி வரை சில மாவட்டங்களில் கனமழையும், ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம்,
-
மத்திய அரசிடம் பேசி பிளாஸ்டிக் லைட்டர்களை தடை செய்ய நடவடிக்கை எடுப்போம்: கோவில்பட்டியில் இ.பி.எஸ். உறுதி
01 Aug 2025கோவில்பட்டி, தீப்பெட்டி தொழிலுக்கு சவாலாக உள்ள ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் லைட்டர்களை தடை செய்ய மத்திய அரசிடம் பேசி நடவடிக்கை எடுப்போம் என அ.தி.மு.க.
-
5 நாட்களுக்கு பிறகு கவின் உடலை பெற்று கொண்ட உறவினர்கள்
01 Aug 2025திருநெல்வேலி, நெல்லையில் ஆணவக் கொலையான கவின் செல்வகணேஷ் உடலை ஐந்து நாட்களுக்குப் பின்னர் உறவினர்கள் பெற்றுக் கொண்டுள்ளனர்.
-
பிரபல கல்வியாளர் வசந்தி தேவி காலமானார்
01 Aug 2025சென்னை : கல்வித் துறையில் பல்வேறு சீர்திருத்தங்களில் ஈடுபட்ட பிரபல கல்வியாளர் வசந்தி தேவி காலமானார். அவருக்கு வயது 87.
-
உலகம் முழுவதும் இன்று 6 நிமிடம் இருளில் மூழ்கும்? - நாசா விளக்கம்
01 Aug 2025அமெரிக்கா : உலகம் முழுவதும் இன்று 6 நிமிடம் இருளில் மூழ்கும் என்று பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் இதற்கு நாசா மறுத்துள்ளது.
-
71-வது தேசிய விருதுகள் அறிவிப்பு: சிறந்த தமிழ் படமாக 'பார்க்கிங்' தேர்வு
01 Aug 2025புதுடில்லி : இந்தியாவின் 71-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
-
கவின் குடும்பத்திற்கு ரூ.6 லட்சம் நிவாரணம் : மாநில எஸ்.சி, எஸ்.டி ஆணையம் அறிவிப்பு
01 Aug 2025தூத்துக்குடி : கவின் குடும்பத்திற்கு ரூ.6 லட்சத்திற்கான நிவாரண உதவியை மாநில எஸ்.சி., எஸ்.டி. அணையம் அறிவித்துள்ளது.
-
ஓ.பி.எஸ். கேட்டால் பிரதமரை சந்திக்க ஏற்பாடு: நயினார் நாகேந்திரன் உறுதி
01 Aug 2025மதுரை, ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டால் 26-ந்தேதி தமிழகம் வரும் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்வேன் என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்வு விவகாரம்: இ.பி.எஸ். மனு தள்ளுபடி
01 Aug 2025சென்னை, அ.தி.மு.க.
-
பறக்கும் ரயில் - மெட்ரோ ரயில் இணைப்புக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல்
01 Aug 2025புதுடெல்லி : சென்னை பறக்கும் ரயில் - மெட்ரோ ரயில் இணைப்புக்கு கொள்கை அளவில் ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கி உள்ளது என மத்திய ரயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவி