முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் ஷ்ரேயாஸ் அய்யர்..?

சனிக்கிழமை, 2 ஆகஸ்ட் 2025      விளையாட்டு      தேர்தல்
shreyas

Source: provided

மும்பை : ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் ஷ்ரேயாஸ் அய்யர் இடம் பிடிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஷ்ரேயாஸ் அய்யர்...

இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் அய்யர். இவரது தலைமையிலான பஞ்சாப் அணி இறுதிப் போட்டியில் ஆர்.சி.பி. அணியுடன் மோதி, சாம்பியன் வாய்ப்பை இழந்தது. இந்தத் தொடரில் 17 போட்டிகளில் 604 ரன்கள் விளாசினார். இவர் தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் இடம்பிடித்து விளையாடி வருகிறார். டெஸ்ட் மற்றும் டி20 போட்டிக்காக இந்திய அணியில் இவர் சேர்க்கப்படவில்லை. 

இந்திய அணியில்... 

இந்த நிலையில் நல்ல  பார்மில் உள்ள அவரை ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துலீப் டிராபிக்கான மேற்கு மண்டல அணியின் கேப்டனாக இவர் பெயர் அறிவிக்கப்படவில்லை. ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சேர்க்க பி.சி.சி.ஐ. முடிவு செய்துள்ளதால் அவர் கேப்டனாக நியமிக்கபடவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

பலப்பரீட்சை...

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் செப்டம்பர் 28ஆம் தேதி வரை நடைபெற பெறுகிறது. இந்தியா- பாகிஸ்தான் அணிகள் செப்டம்பர் 14ஆம் தேதி பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. ஷ்ரேயாஸ் அய்யர் கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடினார். அதன்பின் ஷ்ரேயாஸ் அய்யர் இந்திய அணிக்காக டி20 போட்டியில் விளையாடியது கிடையாது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து