முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிவகங்கை சாலை விபத்தில் உயிரிழந்த 3 பேர் குடும்பத்தினருக்கு தலா ரூ.3லட்சம் நிதியுதவி : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

புதன்கிழமை, 12 நவம்பர் 2025      தமிழகம்
CM 2024-12-16

Source: provided

சென்னை : சிவகங்கை சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், சிட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பிரசாத் (வயது 25) என்பவர் தனது மனைவி சத்யா (வயது 20) மகன் செல்வன்.அஸ்வந்த் (வயது 3) மற்றும் அவரது உறவினர் சோனேஸ்வரி ஆகியோருடன் நேற்று முன்தினம் (11.11.2025) இரவு சுமார் 7.20 மணியளவில் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், அனஞ்சையூர் கிராமத்தில் நடைபெற்ற இறுதிச்சடங்கு ஒன்றில் கலந்துகொண்டுவிட்டு இருசக்கர வாகனத்தில் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது மதுரையிலிருந்து சிவகங்கை நோக்கிச் சென்ற காவல்துறை வாகனமும் மேற்படி இருசக்கர வாகனமும் பூவந்தி - சக்குடி மதுரை தேசிய நெடுஞ்சாலை செல்லும் சாலையில் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த பிரசாத் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

மேலும் அவரது மனைவி சத்யா மற்றும் மகன் அஸ்வந்த் ஆகிய இருவரும் சிகிச்சைக்காக திருப்புவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இவ்விபத்தில் காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சோனேஸ்வரி என்பவருக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். 

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ஒரு லட்சம் ரூபாயும் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.என தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து