முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவில் புதிதாக திறக்கப்பட்ட பாலம் நிலச்சரிவால் இடிந்தது

புதன்கிழமை, 12 நவம்பர் 2025      உலகம்
China 2025-11-12

Source: provided

பெய்ஜிங் : சீனாவில் புதிதாக திறக்கப்பட்ட பாலத்தில் நிலச்சரிவால் இடிந்து விழும் நிலையில் உள்ளது.

தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இருந்து திபெத்தை இணைக்கும் வகையில் பாலம் கட்டப்பட்டது. ஹாங்கி என்று பெயரிடப்பட்ட அந்த பாலம் சில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. இந்தநிலையில் திபெத்துடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. மலையில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ஷுவாங்ஜியாங்கோ நீர்மின் நிலையத்தில் உள்ள பாலத்தின் ஒரு பகுதி இடிந்து ஆற்றுக்குள் விழுந்தது.

அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இதையடுத்து 758 மீட்டர் நீளமுள்ள ஹாங்கி பாலத்தில் அனைத்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. பாலம் இடிந்து விழும் வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது. சீனாவின் தென்மேற்குப் பகுதியில் சமீபத்தில் திறக்கப்பட்ட பாலம் இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து