முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

த.வெ.க.வுக்கு ‘ஆட்டோ ரிக்‌ஷா’ சின்னம் கிடைக்குமா?

புதன்கிழமை, 12 நவம்பர் 2025      தமிழகம்
Auto 2025-01-27

Source: provided

சென்னை : விஜய் கட்சிக்கு ‘ஆட்டோ ரிக்‌ஷா’ சின்னம் குறித்து தேர்தல் கமிஷனில் த.வெ.க. மனு அளித்துள்ளது.

2026 தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்கும் வகையில், மக்கள் சந்திப்பை முன்னெடுத்து வந்த த.வெ.க.வுக்கு கரூர் நிகழ்வு தீரா வலியை ஏற்படுத்தி விட்டது. அந்த சோக நிகழ்வில் இருந்து கொஞ்சம், கொஞ்சமாக த.வெ.க. மீண்டு வருகிறது. மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கட்சி பணியாற்ற விஜய் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

சட்டசபை தேர்தலுக்கு 6 மாதங்களே இருக்கும் நிலையில், த.வெ.க.வுக்கு தேர்தல் சின்னம் பெறுவதற்கான நடவடிக்கையில் விஜய் இறங்கியுள்ளார். முன்னதாக த.வெ.க. கட்சி கடந்த பிப்ரவரி 7-ந் தேதி அன்று தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்டது. சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அங்கீகரிக்கப்படாத கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்களுக்கு என்று தேர்தல் கமிஷன் 184 சின்னங்களை பட்டியலிட்டு வைத்துள்ளது.

தேர்தல் கமிஷன் விதிகளின்படி, பதிவு செய்துள்ள புதிய கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதற்கு தாங்கள் விரும்பும் 5 முதல் 10 சின்னங்களை குறிப்பிட்டு இந்த மாத இறுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷன் கால அவகாசம் அளித்துள்ளது. இந்த நிலையில் டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் த.வெ.க.வுக்கு சின்னம் கேட்டு கட்சியின் இணை பொதுச்செயலாளர் சி.டி.நிர்மல்குமார் மற்றும் நிர்வாகிகள் நேற்று முன்தினம் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த மனுவில், ‘ஆட்டோ-ரிக்‌ஷா', ‘விசில்', ‘கிரிக்கெட் பேட்' உள்ளிட்ட 10 சின்னங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதில் ‘ஆட்டோ ரிக்‌ஷா' சின்னம் முதலில் குறிப்பிடப்பட்டுள்ளது. தங்கள் கட்சிக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யும்போது, இந்த சின்னத்துக்கு முன்னுரிமை அளிக்குமாறும் மனுவில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

சின்னம் கேட்டு புதிய கட்சிகள் அளிக்கும் அனைத்து மனுக்களையும் தேர்தல் கமிஷன் ஆய்வு செய்து முடிவு எடுக்கும். பின்னர், எந்தெந்த கட்சிகளுக்கு என்னென்ன சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அந்தந்த கட்சிகளுக்கு கடிதம் மூலம் தகவல் தெரிவிக்கும். இந்த நடைமுறை டிசம்பர் மாத இறுதியில் தொடங்கும். 

‘2026 சட்டமன்ற தேர்தலில் த.வெ.க. தலைமையில்தான் கூட்டணி, முதல்-அமைச்சர் வேட்பாளர் விஜய்’ என்று சமீபத்தில் நடைபெற்ற அக்கட்சியின் சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சட்டமன்ற தேர்தலில் த.வெ.க. போட்டியிடும் சின்னம் சட்டென்று மக்கள் மனதில் பதிய வேண்டும் என்பது விஜய்யின் விருப்பமாக உள்ளது. எனவே ‘ஆட்டோ ரிக்‌ஷா' சின்னம் கிடைத்தால், மக்களிடம் எளிதில் கொண்டு சேர்த்து விடலாம் என்பதும் விஜய்யின் வியூகமாகவும் இருப்பதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து