முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அப்பாவிகள் கொடூரமாக கொல்லப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது: காஷ்மீர் முதல்வர்

வியாழக்கிழமை, 13 நவம்பர் 2025      இந்தியா
Umar-Abdulla

Source: provided

ஸ்ரீநகர்: அப்பாவிகள் கொடூரமாக கொல்லப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என உமர் அப்துல்லா தெரிவித்தார்.

தலைநகர் டெல்லியில் செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட கார் குண்டுவெடிப்பில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது. இந்த சம்பவம் பயங்கரவாத தாக்குதல் என மத்திய அரசு அறிவித்துள்ளது. சம்பவம் தொடர்பாக டாக்டர்கள் உள்பட பலர் கைதுசெய்யப்பட்டு, விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார்கள். இந்த நிலையில், டெல்லி சம்பவம் தொடர்பாக ஜம்மு காஷ்மீர் முதல் மந்திரி உமர் அப்துல்லா பேசியதாவது;-

டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு எவ்வளவு கண்டனம் தெரிவித்தாலும் போதாது. அப்பாவிகள் கொடூரமாக கொல்லப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எந்த மதமும் இதை அனுமதிக்காது. நாம் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். ஜம்மு காஷ்மீரில் வசிக்கும் ஒவ்வொருவரும் பயங்கரவாதிகளோ அல்லது பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்களோ அல்ல. காஷ்மீரிகளை சந்தேகக் கண் கொண்டு பார்ப்பது சரியான அணுகுமுறை அல்ல. மத்திய அரசின் பாதுகாப்பு குறைபாடு தான் இந்த குண்டுவெடிப்புக்கு காரணம். குண்டுவெடிப்புக்குப் பின்னணியில் உள்ளவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து