முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொதுத்தேர்வு எழுதும் 10-ம் வகுப்பு மாணவர்களின் பெயர் விவரங்களில் திருத்தம் செய்ய நவ.27 வரை அவகாசம்

வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2025      தமிழகம்
School 2023 04 07

சென்னை, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் விவரங்களில் திருத்தம் மேற்கொள்ள அவகாசம் வருகிற 27-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர்ப்பட்டியல் தயாரிக்கப்பட இருக்கிறது. இதையடுத்து எமிஸ் தளத்தில் மாணவர்களின் பெயர், பிறந்த தேதி, பாலினம், புகைப்படம், கைப்பேசி எண், முகவரி உள்ளிட்ட விவரங்கள் சரியாக உள்ளதா? என்பதை சரிபார்த்து திருத்தம் இருப்பின் அவற்றை மேற்கொள்ளலாம் என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறையின் கீழ் வரும் அரசு தேர்வுத்துறை தெரிவித்திருந்தது.

அதன்படி, மாணவர்களின் விவரங்களை தேர்வுத்துறை இணையதளத்தில் 19-ம் தேதிக்குள் (நேற்று முன்தினம்) பதிவேற்றம் செய்யவேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த கால அவகாசம் வருகிற 27-ம் தேதி வரை நீ்ட்டிக்கப்பட்டுள்ளதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘பெயர் விவரங்களில் திருத்தம் மேற்கொள்ள இதுவே இறுதியான வாய்ப்பாகும். இதை தலைமையாசிரியர்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இந்த பெயர்ப்பட்டியலின் அடிப்படையிலேயே மதிப்பெண் சான்றிதழ் அச்சிடப்படும் என்பதால் பணிகளை மிகவும் கவனமாக மேற்கொள்ளவேண்டும். ஏதேனும் தவறுகள் நிகழ்ந்தால் சம்பந்தப்பட்ட வகுப்பாசிரியர் மற்றும் பள்ளித்தலைமை ஆசிரியரே பொறுப்பேற்க நேரிடும்' என கூறப்பட்டிருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து