எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பல்லடம், பல்லடத்தில் இன்று தி.மு.க. மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு நடைபெறுகிறது. இதில் முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். தி.மு.க. மேற்கு மண்டல மகளிர் மாநாட்டை முன்னிட்டு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த மேற்கு மண்டல மகளிர் மாநாட்டில் நீலகிரி, நாமக்கல், கோவை, ஈரோடு, கரூர், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் பெண்கள் வரை பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து தி.மு.க. தலைமைக்கழம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பூர் மாவட்டத்தில் இன்று பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டை பகுதியில் இந்த மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டிற்கு வெல்லும் தமிழ் – தென் தி.மு.க. மேற்கு மண்டல மகளிர் மாநாடு என பெயரிடப்பட்டுள்ளது.
1.31 கோடி மகளிருக்கு ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’, ‘விடியல் கட்டணமில்லா பேருந்துப் பயணம்’, கல்வி கற்கும் மாணவிகளுக்கு ‘புதுமைப் பெண் திட்டம்’, வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பாதுகாப்பான ‘தோழி விடுதி’, இந்தியாவிலேயே அதிக அளவாக 43 சதவீதம் வேலைக்குப் போகும் பெண்களைக் கொண்ட மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்வதற்கான சூழல் என மகளிர் மேம்பாட்டுக்காக தொடர்ச்சியான திட்டங்களை வகுத்து வரும் தமிழ்நாடு முதல்வர், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றிட - கட்சி துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி , எம்.பி., தலைமையில்; கட்சிப் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, முனைவர் க.பொன்முடி, திருச்சி சிவா, எம்.பி., ஆ.இராசா, எம்.பி., அந்தியூர் ப.செல்வராஜ், எம்.பி., மு.பெ.சாமிநாதன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கழக மகளிர் அணிச் செயலாளர் திருமதி ஹெலன் டேவிட்சன், மகளிர் தொண்டர் அணிச் செயலாளர் நாமக்கல் ப.இராணி ஆகியோர் முன்னிலையில் - கரூர் மாவட்டக் கழகச் செயலாளர் திரு.வி.செந்தில்பாலாஜி, எம்.எல்.ஏ., அவர்கள் வரவேற்பில்; வருகிற 29.12.2025 திங்கட்கிழமை, மாலை 4.00 மணி அளவில், திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில், “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” தி.மு.க. மேற்கு மண்டல மகளிர் மாநாடு நடைபெற உள்ளது.
இம்மாநாட்டினை அமைச்சர்கள் சு.முத்துசாமி, மா.மதிவேந்தன், கயல்விழி செல்வராஜ், கா.இராமச்சந்திரன் - மாவட்டச் செயலாளர்கள்/ பொறுப்பாளர்களான மேயர் என்.தினேஷ்குமார், என்.நல்லசிவம், தோப்பு வெங்கடாசலம், தொ.அ.ரவி, தளபதி முருகேசன், துரை செந்தமிழ்ச்செல்வன், கே.எம்.ராஜு, கே.ஆர்.என்.இராஜேஸ்குமார், எம்.பி., கே.எஸ்.மூர்த்தி, - பாராளுமன்ற உறுப்பினர்கள் கே.ஈஸ்வரசாமி, எம்.பி., இ.பிரகாஷ், எம்.பி., கணபதி ப.இராஜ்குமார், எம்.பி., - சட்டமன்ற உறுப்பினர்கள் வி.சி.சந்திரகுமார், எம்.எல்.ஏ., ஏ.ஜி.வெங்கடாசலம், எம்.எல்.ஏ., பெ.இராமலிங்கம், எம்.எல்.ஏ., ஆர்.இளங்கோ, எம்.எல்.ஏ., க.சிவகாமசுந்தரி, எம்.எல்.ஏ., இரா.மாணிக்கம், எம்.எல்.ஏ., ஆகியோர் ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்துள்ளனர். நிறைவாக, திருப்பூர் மத்திய மாவட்டச் செயலாளர் திருப்பூர் க.செல்வராஜ், எம்.எல்.ஏ., நன்றியுரையாற்றுகிறார்.
இந்த மாநாட்டிற்கு தி.மு.க. மாநில மகளிர் அணி சார்பில் முழுமையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதல்வரின் உரையில், பெண்களுக்கான முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பும் தி.மு.க. தொண்டர்கள் மற்றும் மகளிர் மத்தியில் நிலவுகிறது.மாநாடு நடைபெறுவதற்காக காரணம்பேட்டை பகுதியில் 29 ஏக்கர் பரப்பளவில் பிரதான மேடை மற்றும் மாநாட்டு வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், வாகன நிறுத்தம், பாதுகாப்பு, உணவு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் சேர்த்து மொத்தம் 90 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேடை அமைப்பு, அலங்காரம், ஒலிபெருக்கி வசதி உள்ளிட்டவை முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்த மேற்கு மண்டல மகளிர் மாநாட்டில் நீலகிரி, நாமக்கல், கோவை, ஈரோடு, கரூர், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் பெண்கள் வரை பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட 39 சட்டப்பேரவை தொகுதிகளில் இருந்து பெண்களை மாநாட்டிற்கு அழைத்து வருவதற்காக, பூத் வாரியாக பெண் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று பெண்களை ஒருங்கிணைத்து வருகிறார்கள்.
மாநாட்டில் பங்கேற்கும் பெண்களுக்காக சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 30 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கு கருப்பு–சிவப்பு நிற சுடிதார், 30 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு கருப்பு–சிவப்பு நிற சேலை வழங்கப்பட உள்ளது. மேலும், மாநாட்டில் அமர்வதற்கான இருக்கைகளில் 13 வகையான சிட்டுண்டிகள் வைக்கப்படுகின்றன.
பெண்களின் வசதிக்காக மொபைல் கழிப்பறைகள், குடிநீர் வசதி, மருத்துவ குழு, தன்னார்வலர்கள் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மாநாடு முடிந்து செல்லும் பெண்களுக்கு இரவு உணவும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி, மாநாட்டை ஒட்டி பல்லடம் மற்றும் காரணம்பேட்டை பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தனித்திட்டமும் வகுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பெண்கள் அரசியலில் முக்கிய பங்காற்ற வேண்டும் என்ற தி.மு.க.வின் நோக்கத்தை வெளிப்படுத்தும் மாநாடாக இந்த மேற்கு மண்டல மகளிர் மாநாடு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
தமிழக சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பு மார்ச் முதல் வாரத்தில் வெளியாக வாய்ப்பு
07 Jan 2026சென்னை, தமிழக சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பு மார்ச் முதல் வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
துணிவிருந்தால் என்னை கைது செய்யுங்கள்: ட்ரம்ப்புக்கு கொலம்பியா அதிபர் சவால்
07 Jan 2026நியூயார்க், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஒரு கோழை, துணிவிருந்தால் என்னை கைது செய்யட்டும் என கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ சவால் விட்டுள்ளார்.
-
என் தந்தை விரைவில் நாடு திரும்புவார்: வெனிசுலா நாடாளுமன்றத்தில் மதுரோ மகன் உருக்கமான பேச்சு
07 Jan 2026காரக்கா, அமெரிக்காவால் கடத்தப்பட்டுள்ள என் தந்தை நிகோலஸ் மதுரோ மீண்டும் நாடு திரும்புவார் என பேரவையில் உறுப்பினர்களுக்கு மத்தியில் கண்ணீர் மல்க உருக்கமாகப் பேசினார் அவர
-
டி-20 உலக கோப்பை தொடர்: வங்கதேசத்துக்கான போட்டிகளை இலங்கைக்கு மாற்ற ஐ.சி.சி. மறுப்பு
07 Jan 2026லண்டன், இந்தியாவில் வங்கதேச அணி விளையாட இருந்த டி-20 உலக கோப்பைக்கான போட்டிகளை இலங்கைக்கு மாற்ற ஐ.சி.சி. மறுப்புத் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வன்முறைகள் அதிகரிப்பு...
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-01-2026
08 Jan 2026 -
நியூசி.க்கு எதிரான தொடரில் விளையாடுகிறார் ஷ்ரேயாஸ் : பி.சி.சி.ஐ. வெளியிட்ட முக்கிய தகவல்
07 Jan 2026புதுடெல்லி, பி.சி.சி.ஐ. மருத்துவக்குழு ஷ்ரேயாஸ் அய்யருக்கு முழுஉடற்தகுதி சான்று அளித்துள்ளது.
-
நான் தலையிடாவிட்டால் ரஷ்யா உக்ரைனை கைப்பற்றியிருக்கும்: அதிபர் ட்ரம்ப் தகவல்
08 Jan 2026வாஷிங்டன், நான் தலையிடாவிட்டால் ரஷ்யா உக்ரைனை கைப்பற்றியிருக்கும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
மதுரையில் 3 ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகள், வீரர்களுக்கான இணையதள பதிவு நிறைவு
08 Jan 2026மதுரை, மதுரை மாவட்டத்தில் நடைபெறும் 3 ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான இணையதள பதிவு நேற்றுடன் முடிவடைந்தது.
-
மர்ம நபர்களால் வங்காளதேசம் தேசிய கட்சியின் இளைஞர் தலைவர் படுகொலை
08 Jan 2026டாக்கா, மர்ம நபர்களால் வங்காளதேசம் தேசிய கட்சியின் இளைஞர் தலைவர் படுகொலை செய்யப்பட்டார்.
-
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கும் மசோதாவுக்கு அதிபர் ட்ரம்ப் ஒப்புதல்
08 Jan 2026வாஷிங்டன், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கும் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்
-
ராமேசுவரம்-தாம்பரம் சிறப்பு ரெயிலில் கூடுதல் பெட்டிகள்
08 Jan 2026திருச்சி, ராமேசுவரம் - தாம்பரம் சிறப்பு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணக்கப்பட்டுள்ளது.
-
பா.ம.க. சார்பில் கூட்டணி பேச அன்புமணிக்கு தகுதியில்லை : ராமதாஸ் பேட்டி
08 Jan 2026விழுப்புரம், பா.ம.க.
-
கணினிகள் உள்ளிட்ட தொழில்நுட்ப பொருட்களை ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்ய சீனா திடீர் தடை
08 Jan 2026பீஜிங், சீனாவில் இருந்து ஜப்பானுக்கு ஏற்றுமதியாகும் ராணுவ தொழில்நுட்பங்களான அணுசக்தி உபகரணங்கள், மின்னணு பொருட்கள், கணினிகள், விமான பொருட்கள் உள்ளிட்ட தொழில்நுட்ப பொருட
-
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியா? ரிலையன்ஸ் விளக்கம்
08 Jan 2026புதுடெல்லி, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி கிடையாது என ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.
-
செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் திறப்பு எப்பொழுது? அமைச்சர் சேகர்பாபு தகவல்
08 Jan 2026சென்னை, செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அடுத்த மாதம் திறக்கப்பட உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
-
முதல் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் வரும் ஏப்ரல் 1-ம் தேதி தொடக்கம்
08 Jan 2026புதுடெல்லி, முதல்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியான வீடுகள் பட்டியலிடுதல் மற்றும் கணக்கெடுக்கும் பணிகள் ஏப்ரல் 1-ந் தேதி தொடங்குவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு
-
பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி குறித்து அ.தி.மு.க. பேச்சுவரத்தை: டெல்லியில் எடப்பாடி பழனிசாமி பேட்டி
08 Jan 2026புதுடெல்லி, பா.ம.க.வைத் தொடர்ந்து இன்னும் பல கட்சிகள் எங்களுடன் வந்து இணையவுள்ளார்கள்.
-
பொங்கல் பரிசு தொகை டோக்கன் வாங்காதவர்கள் என்ன செய்யலாம்..?
08 Jan 2026சென்னை, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.
-
ஞாயிற்றுக்கிழமையான வரும் பிப்ரவரி 1-ல் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்ய பார்லி. குழு பரிந்துரை
08 Jan 2026புதுடெல்லி, ஞாயிற்றுக்கிழமையான பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய பாராளுமன்ற குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
3 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்தை சென்னை ஆலந்தூரில் துவக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
08 Jan 2026சென்னை, சென்னை ஆலந்தூரில் ரூ.3 ஆயிரம் ரொக்க பணத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
-
ஆர்டர்லி முறையை ஒழிக்க கலெக்டர் தலைமையில் மாவட்டம்தோறும் குழு தமிழ்நாட அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
08 Jan 2026சென்னை, ஆர்டர்லி முறையை ஒழிக்க மாவட்டம் தோறும் கலெக்டர் தலைமையில் குழு அமைக்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது.
-
'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' திட்டம் நிச்சயம் வெற்றி பெறும்: அமைச்சர் ரகுபதி நம்பிக்கை
08 Jan 2026சென்னை, உங்கள் கனவை சொல்லுங்கள் திட்டம் குறித்து எடப்பாடி பழனிசாமி அலறுவது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ள அமைச்சர் ரகுபதி, இந்த திட்டம் நிச்சயம் வெற்றி பெறும் என்றும் அவ
-
சிவகங்கையில் ஜல்லிக்கட்டு போட்டி: அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு
08 Jan 2026மதுரை, சிவகங்கையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான இடம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
-
கடலூரில் இன்று நடைபெறுகிறது தே.மு.தி.க. உரிமை மீட்பு மாநாடு: கூட்டணி அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
08 Jan 2026கடலூர், கடலூரில் தே.மு.தி.க. உரிமை மீட்பு மாநாடு நடைபெறுகிறது. இதில் கூட்டணி குறிதது அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருப்பரங்குன்றம் வழக்கு: ராம ரவிக்குமார் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு
08 Jan 2026மதுரை, திருப்பரங்குன்றம் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் ராம ரவிக்குமார் தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.


