முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வருகிற 9-ம் தேதி அ.தி.மு.க.வில் வேட்பாளர் நேர்காணல் துவக்கம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சனிக்கிழமை, 3 ஜனவரி 2026      தமிழகம்      அரசியல்
EPS 2023 03 27

சென்னை, ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். மாளிகையில் அ.தி.மு.க.வில் வேட்பாளர் நேர்காணல் ஜன.9-ம் தேதி முதல் ஜன.13-ம் தேதி வரை நடைபெற உள்ளதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- தமிழ்நாடு சட்டசபை தேர்தல், புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டசபை தேர்தல்களில் அ.தி.மு.க. சார்பில் வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு கோரி, விருப்ப மனு அளித்துள்ளவர்களுடனான நேர்காணல் சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக எம்.ஜி.ஆர். மாளிகையில் 9-1-2026 வெள்ளிக்கிழமை முதல் 13-1-2026 செவ்வாய்க்கிழமை வரை நடைபெற உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

9-1-2026 காலை - கோவை மாநகர், கோவை புறநகர் வடக்கு, கோவை புறநகர் தெற்கு, நீலகிரி, திருப்பூர் மாநகர், திருப்பூர் புறநகர் கிழக்கு, திருப்பூர் புறநகர் மேற்கு, நாமக்கல், சேலம் மாநகர். மாலை - சேலம் புறநகர், ஈரோடு மாநகர், ஈரோடு புறநகர் கிழக்கு, ஈரோடு புறநகர் மேற்கு, கரூர், திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல் மேற்கு.

10-1-2026 காலை - கன்னியாகுமரி கிழக்கு, கன்னியாகுமரி மேற்கு, தஞ்சாவூர் கிழக்கு, தஞ்சாவூர் மேற்கு, தஞ்சாவூர் மத்தியம், தஞ்சாவூர் தெற்கு, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி மாநகர், திருநெல்வேலி புறநகர், விருதுநகர் கிழக்கு. மாலை - திருவாரூர், மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு, மதுரை புறநகர் மேற்கு, தேனி கிழக்கு, தேனி மேற்கு, புதுக்கோட்டை வடக்கு, புதுக்கோட்டை தெற்கு.

11-1-2026 காலை - விருதுநகர் மேற்கு, கடலூர் கிழக்கு, கடலூர் வடக்கு, கடலூர் தெற்கு, கடலூர் மேற்கு, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி புறநகர் வடக்கு. மாலை - திருச்சி மாநகர், திருச்சி புறநகர் தெற்கு, பெரம்பலூர், அரியலூர், கிருஷ்ணகிரி கிழக்கு, கிருஷ்ணகிரி மேற்கு, தர்மபுரி.

12-1-2026 காலை - விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு, தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு, திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு. மாலை - திருவண்ணாமலை கிழக்கு, திருவண்ணாமலை மத்தியம், வேலூர் மாநகர், வேலூர் புறநகர், ராணிப்பேட்டை கிழக்கு, ராணிப்பேட்டை மேற்கு, திருப்பத்தூர்.

13-1-2026 காலை - திருவள்ளூர் வடக்கு, திருவள்ளூர் மத்தியம், திருவள்ளூர் தெற்கு, திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு, காஞ்சீபுரம், செங்கல்பட்டு கிழக்கு, செங்கல்பட்டு மேற்கு, தென்சென்னை வடக்கு (கிழக்கு), தென்சென்னை வடக்கு (மேற்கு), தென்சென்னை தெற்கு (கிழக்கு), தென்சென்னை தெற்கு (மேற்கு). மாலை - புதுச்சேரி மாநிலம், கேரளா மாநிலம், சென்னை புறநகர், வடசென்னை வடக்கு (கிழக்கு), வடசென்னை வடக்கு (மேற்கு), வடசென்னை தெற்கு (கிழக்கு), வடசென்னை தெற்கு (மேற்கு).

 

இந்த நேர்காணலில், கட்சி அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கு விருப்ப மனு அளித்துள்ளவர்கள், தொகுதி பற்றிய நிலவரங்கள் மற்றும் வெற்றி வாய்ப்பு பற்றிய நிலவரங்களை அறிந்திட தங்களுக்காக விருப்ப மனு அளித்துள்ளவர்கள் மட்டும், விருப்ப மனு பெற்றதற்கான அசல் ரசீதுடன் தவறாமல், தலைமைக் கழகத்திற்கு வருகை தந்து, நேர்காணலில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து