முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விதர்பா அணிக்கு எதிராக முதல் சதமடித்த ஹார்திக் ஒரே ஓவரில் 34 ரன்கள் விளாசல்

சனிக்கிழமை, 3 ஜனவரி 2026      விளையாட்டு
Hardik-2026-01-03

மும்பை, விஜய் ஹசாரே கோப்பையில் ஒரே ஓவரில் 5 சிக்ஸர்கள் அடித்து அசத்திய ஹார்திக் பாண்டியாவின் விடியோ வைரலாகி வருகிறது. அதிரடியாக விளையாடிய ஹார்திக் பாண்டியா 68 பந்துகளில் தனது முதல் லிஸ்ட் ஏ சதம் அடித்து அசத்தினார்.

பல நகரங்களில்...

33-வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் எலைட் பிரிவில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.  இதில் நேற்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் பரோடா - விதர்பா அணிகள் மோதுகின்றன. முதலில் பேட்டிங் செய்த பரோடா அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 293 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் சிறப்பாக விளையாடி சதமடித்த ஹர்திக் பாண்டியா 133 ரன்கள் எடுத்தார்.

ஐந்து  சிக்சர்கள்....

விஜய் ஹசாரே கோப்பையில் பரோடா அணியும் விதர்பா அணியும் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற விதர்பா அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் ஆடிய பரோடா அணி 50 ஓவர்களில் 293/9 ரன்கள் எடுத்தது. இந்தப் போட்டியில் ஹார்திக் பாண்டிய 62 பந்துகளில் 66 ரன்கள் எடுத்திருந்தபோது, போட்டியின் 39-வது ஓவரை பார்த் ரேகாடே வீசினார். இந்த ஓவரில் 5 சிக்ஸர்கள், 1 பவுன்டரி அடித்த ஹார்திக் 68 பந்துகளில் சதத்தை நிறைவு செய்தார். பின்னர் 133 ரன்களில் ஹார்திக் பாண்டியா ஆட்டமிழந்தார். விதர்பா அணியில் யஷ் தாக்குர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து