எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, விஜய் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தும் பேருந்தில் நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனையிட்டனர். விஜய் பிரச்சார வாகன ஓட்டுனரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
கடந்த செப். 27ம் தேதி கரூரில் விஜய் கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர், பலர் படுகாயமடைந்தனர். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இதற்கு முன்பாக, கடந்த நவ.25-ம் தேதி தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகியோர் புதுடெல்லியில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராகினர். இவர்களோடு, தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் கே.பி. மதியழகன், எம்.சி. பவுன்ராஜ் ஆகியோரும் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராகினர். சி.பி.ஐ. அதிகாரிகளின் பல்வேறு கேள்விகளுக்கு இவர்கள் பதில் அளித்தனர்.
டிச.4-ம் தேதி கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேலும் சி.பி.ஐ. அதிகாரிகள் முன் ஆஜராகி அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அவரிடம் அப்போது இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, இந்த வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராக விஜய்க்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி உள்ளது. அதில், ஜனவரி 12-ம் தேதி டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், விஜய் பிரச்சார வாகனத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் கரூர் எடுத்து சென்றுள்ளனர். பனையூரில் இருந்து கரூர் எடுத்து சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள், பேருந்தில் சோதனை செய்தனர். விஜய் பிரச்சார வாகன ஓட்டுனரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


