முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தணிக்கை சான்று விவகாரத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை ஜனநாயகன் படத்தயாரிப்பு நிறுவனம் குற்றச்சாட்டு

செவ்வாய்க்கிழமை, 20 ஜனவரி 2026      சினிமா
chennai-high-court 2022-08-29

சென்னை, தணிக்கை சான்று விவகாரத்தில் வெளிப்படை தன்மை இல்லை என்று ஜனநாயகன் படத்தயாரிப்பு நிறுவனம் குற்றச்சாட்டியுள்ளது.

ஜனநாயகன் தணிக்கை சான்றிதழ் வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த தீர்ப்புக்கு தடை விதித்த சென்னை ஐகோர்ட் டிவிஷன் பெஞ்ச் தீர்ப்பை எதிர்த்து படத்தின் தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மேல்முறையீட்டு மனு நேற்று (செவ்வாய் கிழமை) சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. ஜனநாயகன் படத்தயாரிப்பு நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் சதீஸ் பராசரன், பிரதீப் ராய் ஆஜரானார்கள், சென்சார் போர்டு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜரானார்.  சென்சார் போர்டு வாதிடுகையில் கூறப்பட்டதாவது:-

சினிமோட்டோகிராபி சட்டப்படியும், விதிகளின்படியும் 72 நிமிடங்களுக்கு மேல் நீளமான படமாக இருந்தால் சென்சார் போர்டு தலைவர்தான் இறுதி முடிவெடுக்க வேண்டும். இந்த வழக்கில் சென்சார் போர்டு பதிலளிக்க தனி நீதிபதி குறைந்தபட்ச கால அவகாசம் வழங்கியிருக்க வேண்டும். படத்தை 9ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளதாகவும், ரூ.500 கோடி முதலீடு செய்துள்ளதாகவும் கூறி உடனடி நிவாரணம் கோர முடியாது. படத்துக்கு சான்றிதழ் வழங்குவது குறித்து தணிக்கை வாரியம்தான் இறுதி முடிவு அறிவிக்கும். மண்டல அலுவலகத்தில் உள்ள ஆய்வுக் குழுவின் முடிவுகள், தணிக்கை வாரியத்தை கட்டுப்படுத்தாது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில், உணவு இடைவேளை முடிந்து மீண்டும் விசாரணை தொடங்கியுள்ளது. அப்போது ஒருவர் வாரியத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும், வாரியம் ஆய்வு செய்த பிறகு ஒப்புதல் அளிக்கும். அதன் பிறகுதான் அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று சென்சார் போர்ட்டு தரப்பில் வாதிடப்பட்டது. சென்சார் சான்று வழங்க பின்பற்றப்படும் நடைமுறைகளை சினிமாட்டோகிராப் சட்ட விதிகளை மேற்கோள்காட்டி வாதம் முன்வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மறு ஆய்வுக்குழு எத்தனை நாட்களில் முடிவெடுக்க வேண்டும் என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். 

இதற்கு தணிக்கை வாரியம் தரப்பில் ஆஜரான வக்கீல், ‘ஜனநாயகன் திரைப்படம் மறுஆய்வு குழுவுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இல்லாவிட்டால் படம் மறுஆய்வு செய்யப்பட்டிருக்கும். மறுஆய்வு குழுவானது, விண்ணப்பித்த 20 நாளில் அமைக்கப்படும். இக்குழு சான்று வழங்க மறுத்தால் உயர்நீதிமன்றத்தை அணுகலாம் என வாதிட்டார்.

தொடர்ந்து ஜனநாயகன் படத்திற்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளதாக எந்த தகவலும் தயாரிப்பு நிறுவனத்திற்கு சென்சார் போர்டு தரப்பில் தெரிவிக்கவில்லை. தனி நீதிபதியின் உத்தரவில் எந்த தவறும் இல்லை. வாரிய தலைவரின் உத்தரவு எங்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை, தகவல் மட்டுமே தெரிவிக்கப்பட்டது என தயாரிப்பு நிறுவனம் தரப்பில் வாதிடப்பட்டது. 

படத்திற்கு எதிராக புகார் யாரிடம் கிடைத்தது ? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு மும்பையில் உள்ள சென்சார் போர்டு தலைவரிடம் புகார் கிடைத்தது; சான்றிதழ் கொடுக்கும் வரை புகார் கொடுத்து யார் என்பதை படத்தயாரிப்பு நிறுவனத்திற்கு தெரிவிக்ககூடாது என்று சென்சார் போர்டு பதில் அளித்தது. தொடர்ந்து சென்சார் தொடர்பான அனைத்தும் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்ற விதி மீறப்பட்டுள்ளது. 

டிசம்பர் 29-க்கு பிறகு தணிக்கை சான்று விவகாரத்தில் அனைத்தும் மறைக்கப்பட்டது. எதிலும் வெளிப்படைத் தன்மை இல்லை என படத்தயாரிப்பு நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது. படத்தை பார்வையிட்டக் குழுவினர் ஒரு மனதாக சான்று வழங்க பரிந்துரைத்தனர்; படத்தைப் பார்த்து முடித்ததும் தங்கள் கருத்துகளை பதிவு செய்து பரிந்துரை வழங்க வேண்டும்; மாறாக வீட்டுக்கு சென்றுவிட்டு நான்கு நாட்களுக்குப்பின் புகார் அளிக்க முடியாது என பட தயாரிப்பு நிறுவனம் வாதிட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து