முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இரட்டை இலை சின்னம் குறித்த வழக்கு: டெல்லி ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல்

வெள்ளிக்கிழமை, 23 ஜனவரி 2026      இந்தியா
Election-Commision 2023-04-20

புதுடெல்லி, இரட்டை இலை சின்னம் குறித்த வழக்கு குறித்து தேர்தல் ஆணையம் டெல்லி ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்தது. அதில் அ.தி.மு.க.வின் சின்னம் ஒதுக்கீடு உள்ளிட்டவை தொடர்பாக பல்வேறு நபர்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் தீவிர பரிசீலனையில் உள்ளது என்று தெரிவித்துள்ளது.

டெல்லி ஐகோர்ட்டில் புகழேந்தி சார்பில் வழக்குரைஞா் எஸ். மனோஜ் செல்வராஜ், இந்தியத் தலைமைத் தோ்தல் ஆணையத்திற்கு எதிராக கோர்ட் அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தார். அதில், “இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் டெல்லி ஐகோர்ட் கடந்த ஆண்டு மார்ச் 24-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை தோ்தல் ஆணையம் உரிய வகையில் செயல்படுத்தவில்லை. 

இது தொடா்பாக கோர்ட்டை மனுதாரா் மீண்டும் நாடியபோது ஐகோர்ட் 17.12,2024-இல் ஒரு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன் பிறகு, மனுதாரா் தோ்தல் ஆணையத்தில் மனுக்களை அளித்த பிறகும், அவரது கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்து 14 மாதங்கள் ஆகிவிட்டபிறகும் இந்த நிலை உள்ளது. இதனால், கோர்ட் உத்தரவை செயல்படுத்தாமல் இருப்பதற்காக எதிா்மனுதாரா்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் தொடர்பாக விரைந்து பதில் அளிக்காததுஏன்? தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி ஐகோர்ட் கேள்வி எழுப்பி இருந்தது. அதுமட்டுமின்றி, அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகி புகழேந்தியின் நீதிமன்ற கோர்ட் வழக்கில் பதில் அளிக்கவும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது. 

இந்நிலையில் டெல்லி ஐகோர்ட்டில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தொடர்ந்து நடந்த விசாரணையின் போது, “அ.தி.மு.க.வின் சின்னம் ஒதுக்கீடு, பெயர் மற்றும் கொடி உள்ளிட்டவை தொடர்பாக பல்வேறு நபர்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் தீவிர பரிசீலனையில் உள்ளது” என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து