முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நானும், டி.டி.வி. தினகரனும் ஜெயலலிதா வளர்த்த பிள்ளைகள் எடப்பாடி பழனிசாமி பேட்டி

வெள்ளிக்கிழமை, 23 ஜனவரி 2026      தமிழகம்
EPS 2023 03 27

சென்னை, நானும் டி.டி.வி. தினகரனும் ஜெயலலிதா வளர்த்த பிள்ளைகள் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

மதுராந்தகத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

எங்கள் கூட்டணி வலிமையான வெற்றிக் கூட்டணி. தமிழ்நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு சொல்வோம். மேலும் சில கட்சிகள் எங்கள் கூட்டணியில் இணையும். நானும் டி.டி.வி. தினகரனும் அம்மா (ஜெயலலிதா) வளர்த்த பிள்ளைகள். அம்மா விட்டுச்சென்ற பணியை தொடர உள்ளோம். எங்களுக்கு மனகசப்புகள் இருந்தன. அவை அனைத்தையும் மறந்து ஒன்றாக பயணிக்கிறோம். எங்களுக்குள் எந்தப் பிரச்னையும் இல்லை; இருவரும் ஒன்றாக பயணிப்போம், பரப்புரை செய்வோம் தமிழகத்தில் உள்ள குடும்ப ஆட்சி; ஊழல் ஆட்சி அகற்ற வேண்டும் என்று இணைந்து பயணிக்கிறோம். திமுக ஆட்சியில் தினம் ஒரு போராட்டம் நடைபெற்று வரும் அளவுக்கு சீர்கெட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அ.ம.மு.க. பொதுசெயலாளர் தினகரன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- அ.தி.மு.க. விவகாரம் எங்கள் குடும்ப பிரச்சினை. எங்களுக்குள் இருந்த மனஸ்தாபம் நீங்கிவிட்டது. எங்களுக்கு எந்த சங்கடமும் கிடையாது; மன வருத்தமும் கிடையாது. 2021-ல் நடக்காத அமித்ஷாவின் முயற்சி 2026-ல் நடந்துள்ளது. 2017-ல் எடப்பாடி பழனிசாமியும் நானும் அண்ணன் தம்பிகளாக இருந்தது போல இப்போது இருந்து செயல்படுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து