முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனநாயகன் பட விவகாரத்தில் குரல் கொடுத்த முதல்வருக்கு த.வெ.க. தலைவர் விஜய் நன்றி

புதன்கிழமை, 4 மார்ச் 2026      தமிழகம்
Vijay-2-2026-03-04

தஞ்சாவூர், ஜனநாயகன் பட விவகாரத்தில் குரல் கொடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு த.வெ.க. தலைவர் விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.

விஜய்யின் ஜனநாயகன் படம் கடந்த பொங்கல் பண்டிகைக்கு முன்பாக ரிலீஸ் ஆக இருந்தது. ஆனால் தணிக்கை சான்று கிடைக்காததால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், தேர்தலுக்கு முன்பாக படம் வெளியாகுமா? என்பது கேள்விக்குறியாகியுள்ளது. ஜனநாயகன் பட பிரச்சினையின் போது அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் குரல் கொடுத்த நிலையில், விஜய் தனது பட பிரச்சினை தொடர்பாக கருத்து எதுவும் கூறாமல் இருந்தார். விஜய் தனது சொந்த பட பிரச்சினைக்கே குரல் கொடுக்கவில்லை என்று விமர்சனங்கள் எழுந்த நிலையில், நேற்று நடைபெற்ற தஞ்சை கூட்டத்தில் முதல் முறையாக விஜய் ஜனநாயகன் பட விவகாரம் குறித்து பேசினார்.

விஜய் இது தொடர்பாக பேசும் போது, கரூர் முதல் ஜனநாயகன் படம் ரிலீஸ் வரைக்கும் இப்படித்தான் நடந்தது. ஜனநாயகன் ரிலீஸ் விவகாரத்தில் நிறைய பேர் குரல் கொடுத்தார்கள். முக்கியமாக நம் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களும் பூசி மெழுகி, பட்டும் படாமல் குரல் கொடுத்தார்கள். எப்படி இருந்தாலும் குரல் கொடுத்த அவர்களுக்கும் மற்ற அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார். ஜனநாயகன் படம் சென்சார் சர்ச்சையில் சிக்கிய போது முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருந்ததாவது: சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை வரிசையில் சென்சார் போர்டும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் புதிய ஆயுதமாக மாறியுள்ளது. கடுமையான கண்டனங்கள்” என்று பதிவிட்டு இருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து