முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

த.வெ.க. ஆட்சிக்கு வந்தால் ஊழல் இல்லாத ஆட்சியை நடத்துவோம்: தஞ்சை கூட்டத்தில் விஜய் ஆவேசம்

புதன்கிழமை, 4 மார்ச் 2026      தமிழகம்
Vijay-1-2026-03-04

தஞ்சை, தமிழகத்தில் த.வெ.க. ஆட்சிக்கு வந்தால் ஊழல் இல்லாத ஆட்சியை நடத்துவோம் என்று தஞ்சையில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய்யின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நேற்று தஞ்சாவூர் அருகே நடைபெற்றது. அதில் விஜய் பேசியதாவது:- தமிழ்நாட்டின் உண்மையான பிரதிநிதியாக நாம் இருக்கிறோம். நான் என்ன பேசினாலும் அதை திரித்து பேசுகிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு தீய சக்தி என்று சிறிய குழந்தைகள் கூட சொல்ல ஆரம்பித்துவிட்டனர்

தமிழ்நாட்டு அணி, டெல்லி அணி என்று சொல்கிறார்கள். கிரிக்கெட்டில் கூட தமிழ்நாட்டு அணியை டெல்லி அணியால் தொட்டுக் கூட பார்க்க முடியாது. அப்படி இருக்கும்போது, கிரிக்கெட்டில் விசில் போடுவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குத்தான். வரப்போகும் தேர்தலில் விசில் போடப்போவது நம்ம த.வெ.க.தான். த.வெ.க.தான் தமிழ்நாடு; தமிழ்நாடுதான் த.வெ.க... வீட்டுக்கு வீடு விஜய் என்பது இந்த தேர்தலில் 100 சதவீதம் நிரூபிக்கப்படும். அடுத்த ஜென்மத்தில் ஒரு விவசாயி குடும்பத்தில் பிறக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

எனக்கு விவசாயத்தை பற்றி விவரமாக தெரியாது. மற்றவர்கள் மாதிரி டெல்டா காரன் என்று உங்கள் காதில் டால்டா ஊற்ற வரவில்லை. ஆனால் விவசாயிகள் பிரச்சினை பற்றி எனக்கு நன்றாக தெரியும். டெல்டா காரன் என்று சொன்ன முதல்வர் ஸ்டாலின் விவசாயிகளின் பிரச்சினைகள் பற்றி கவனித்தாரா? விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்தது தி.மு.க. அரசு. மணல் மாஃபியா குரூப்புக்க்கு ஆதரவு அளிப்பது உங்கள் தி.மு.க. அரசுதானே. விஜய் வந்தால் நமக்கு பிழைப்பு போய்விடும் என்று இரண்டு கட்சிகளும் சேர்ந்து சதி செய்கின்றன. என்னை முடக்கலாம், ஆனால் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள விஜய்யை முடக்க முடியாது. தி.மு.க. இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்ததாக சரித்திரமே கிடையாது.

கடல் விவசாயிகளான மீனவர்கள் பிரச்சினைக்கு கடிதம் மட்டும் எழுதிவிட்டு மீண்டும் தூங்கப்போய்விடுவார். மத்திய அரசுக்கு உணர்வுப்பூர்வமான அழுத்தம் கொடுக்க வேண்டும். யாரும் அவர்கள் மீது கையே வைக்கக்கூடாது. அடுத்து நம்ம ஆட்சிதான். பாதுகாப்பு பக்காவாக இருக்கும். அடுத்து நாங்கள்தான் ஆட்சிக்கு வருவோம் என்கிறார்கள். 2-வது முறை ஆட்சிக்கு வந்த சரித்திரம் கிடையாது. அவரது அப்பாவாலேயே அது முடியவில்லை. வெறும் ஆறுதல் சொல்வது என்பது தெளிவான அரசியல் கிடையாது.

நீட் தேர்வை ஒழிப்போம் என்றீர்கள். எவ்வளவு பெரிய மோசடி. இது மோசடி ஆட்சி. மோசமானவர்களில் முக்கியமானவர்கள். மக்கள் விரோத ஆட்சி நடத்தும் ஸ்டாலின் சார் வேண்டுமா. விஜய் வேண்டுமா. இந்த சத்தத்துக்கு என்ன அர்த்தம் தெரியுமா, தீய சக்தி தி.மு.க. ஆட்சி முடியட்டும். தூய சக்தி த.வெ.க. வரட்டும். அடுத்து நாங்கள் தான் என்று சொல்பவர்கள், ஊழலே செய்யவில்லை என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்ல முடியுமா. நாம் ஆட்சிக்கு வந்தால் ஊழல் இல்லாத ஆட்சி நடத்துவோம். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து