முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டசபை தேர்தல் தொகுதி பங்கீடு: தி.மு.க.வுடன் இந்திய கம்யூனிஸ்டு இன்று மீண்டும் பேச்சுவார்த்தை

புதன்கிழமை, 4 மார்ச் 2026      தமிழகம்
DMK-Offces 2023 03 31

சென்னை, சட்டசபை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க.வுடன் இந்திய கம்யூனிஸ்டு இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துகிறது.

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் குறைவான காலமே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. பிரச்சாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு, நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், மதி.மு.க., விடுதலை சிறுத்தைகள், தே.மு.தி.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, மக்கள் நீதி மய்யம், மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், எஸ்டிபிஐ, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, முக்குலத்தோர் புலிப்படை உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

அதேவேளை, கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க. பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. டி.ஆர்.பாலு தலைமையில் 7 பேர் கொண்ட தி.மு.க. பேச்சுவார்த்தை குழு கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சிக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, தொகுதி பங்கீடு தொடர்பாக கடந்த 27ம் தேதி தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் வீரபாண்டி தலைமையிலான 4 பேர் குழு தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு எட்டப்படவில்லை.

இந்நிலையில், தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க. , இந்திய கம்யூனிஸ்டு இடையே நேற்று 2ம் கட்டமாக பேச்சுவார்த்தை நடைபெற்து. தி.மு.க. தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் வீரபாண்டியன் தலைமையிலான குழு தி.மு.க. குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். நேற்று பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தல் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த இந்திய கம்யூனிஸ்டு 6 தொகுதிகளில் போட்டியிட்டு 2 தொகுதிகளில் வெற்றிபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து