முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநிலங்களவை தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் தம்பிதுரை போட்டி

புதன்கிழமை, 4 மார்ச் 2026      தமிழகம்
ThambiDurai-2025-04-17

சென்னை, பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தலில் அ.தி.மு.க. அதிகாரப்பூர்வ வேட்பாளராக அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான தம்பிதுரையை அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் இரண்டாம் தேதியுடன் நிறைவடைகிறது. இதில், தி.மு.க. சார்பில் திருச்சி சிவா, என்.ஆர்.இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி சோமு, அ.தி.மு.க.வின் தம்பிதுரை மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் 10 மாநிலங்களில் காலியாக உள்ள 37 மாநிலங்களவை இடங்களுக்கு அடுத்த மாதம் 16 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் வரும் 26 ஆம் தேதி தொடங்கி இன்றுடன் முடிகிறது. மார்ச் 6 ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும் என்றும், மார்ச் 9 ஆம் தேதிக்குள் வேட்புமனுக்களை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அ.தி.மு.க. கூட்டணியில் பாமகவுக்கு ஒரு இடத்தை ஒதுக்கியுள்ளது. இது தொடர்பாக அ.தி.மு.க. தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, 16.3.2026 அன்று நடைபெற உள்ள பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் ஒதுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அ.தி.மு.க. அதிகாரப்பூர்வ வேட்பாளராக அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான தம்பிதுரை அறிவிக்கப்பட்டுள்ளார். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து