எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, உங்கள் பணியில் நாட்டைக் கவனித்தாலும் உங்கள் வீட்டையும் குடும்பத்தையும் அதே அக்கறையுடன் கவனித்துக்கொள்ள வேண்டும் என்று யு.பி.எஸ்.சி. வெற்றியாளர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார்.
வாழ்த்துகள்...
தமிழக அரசின் நான் முதல்வர் திட்டத்தின் மூலம் யு.பி.எஸ்.சி-ல் தேர்ச்சி பெற்றவர்கள் உள்ளிட்ட 60 பேருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறைப்புரையாற்றினார். விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- அகில இந்திய குடிமைப் பணித் தேர்வில் கடுமையான உழைப்பை கொடுத்து, அதில் வெற்றி பெற்றிருக்கக்கூடிய உங்கள் எல்லோருக்கும் முதலில் என்னுடைய பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
கடுமையான தேர்வு....
நீங்கள் படைத்திருப்பது சாதாரண சாதனை இல்லை. இந்தியாவிலேயே ஏன், உலக அளவிலேயே மிகவும் கடினமான தேர்வு என்று யு.பி.எஸ்.சி. தேர்வைத்தான் சொல்வார்கள். தேர்வுக்கு தயாராகின்றவர்களின் மன வலிமையையும், சுயஒழுக்கத்தையும் சோதித்து பார்க்கக் கூடிய கடுமையான தேர்வு அந்த தேர்வு. அப்படிப்பட்ட தேர்வை, உங்களில் சிலர் முதல் முயற்சியிலேயே தேர்ச்சிப் பெற்றிருப்பீர்கள். சிலர் பல ஆண்டுகளாக முயற்சி செய்து வெற்றியடைந்திருப்பீர்கள். ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்னால், என்ன நிலை இருந்தது என்று எல்லோருக்கும் நன்றாக தெரியும்.
பல்வேறு முயற்சிகள்...
தமிழ்நாட்டிலிருந்து யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றியடையும் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துகொண்டே வந்தது. நம்முடைய திராவிட மாடல் ஆட்சிப் பொறுப்பேற்றதற்கு பிறகு, இதை கவனித்து, இதை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்று அதற்கான பல்வேறு முயற்சிகளை நாம் எடுத்தோம். நான் முதல்வன் ஊக்கத்தொகை, உயர் பயிற்சி, நேர்முகத் தேர்வுகளை எதிர்கொள்ளக்கூடிய சிறப்பு பயிற்சி என்று பல்வேறு முன்னெடுப்புகளை நம்முடைய அரசு எடுத்தது. நம்முடைய அரசு எடுத்த முயற்சிகளுக்கு, அண்மைக் காலமாக நல்ல பலன் கிடைத்துக் கொண்டு வருகிறது. இதற்காக உழைத்திருக்கக் கூடிய அதிகாரிகளுக்கும், பயிற்சியாளர்களுக்கும் இந்த நேரத்தில் என்னுடைய நன்றியையும், பாராட்டுகளையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இன்னும் உயர வேண்டும்...
நீங்கள்தான் அமைதியான ஹீரோக்கள். இந்த ஆண்டு 60 பேர் நம்முடைய மாநிலத்திலிருந்து தேர்வாகியிருக்கிறீர்கள். அதில், 56 பேர் நான் முதல்வன் திட்டத்தால் பயனடைந்தவர்கள் என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி! என்னைப் பொருத்தவரை, இந்த எண்ணிக்கை இன்னும் உயர வேண்டும். இங்கு வந்திருக்கக்கூடிய உங்களைப் பார்த்து ரோல் மாடலாக எடுத்துக்கொண்டு இன்னும் பல இளைஞர்கள் தமிழ்நாட்டிலிருந்து இந்தியா முழுவதும் பல மாநிலங்களுக்குச் சென்று, பல்வேறு மாவட்டங்களில், கலெக்டராக, பல்வேறு துறைகளில் செயலாளராக, நாட்டின் வளர்ச்சிக்கும் எளிய மக்களுக்கும் பணியாற்ற வேண்டும். ஏன், வெளிநாடுகளுக்கும் இந்திய தூதர்களாக சென்று, நாடுகளுக்கு இடையிலான நல்லுறவை நீங்கள் மேம்படுத்த வேண்டும்.
30 ஆண்டுகளுக்கும் மேல்...
பொதுவாக, ஆட்சியாளர்களாக இருக்கக்கூடிய நாங்கள்5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தலை சந்தித்து மக்களின் நம்பிக்கையை நாங்கள் பெற வேண்டும். ஆனால், யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றியடைந்த ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்., போன்ற பொறுப்புகளில் அமரும் உங்களுக்கு அப்படிப்பட்ட ஒரு தேவை அமையவில்லை. 30 ஆண்டுகளுக்கும் மேல் தொடர்ச்சியாக உங்கள் பணியை செய்யக் கூடிய வாய்ப்பு உங்களுக்கு இருக்கிறது. இந்த வாய்ப்பு, உங்களை மேலும் பொறுப்புடையவர்களாக உயர்த்த வேண்டும். அடக்கத்தையும், மனிதநேயத்தையும் வளர்க்க வேண்டும்.
அன்பாக, பண்பாக....
அதிகாரிகள் என்றால், அலட்டலாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை, சாதாரண மக்களிடம்கூட அன்பாக, பண்பாக நடந்துகொண்டால் அதுதான் உங்கள் பெயரை காலத்திற்கும் நிலைக்கச் செய்யும்! அப்படி, அன்பும், அடக்கமும், சமூகநீதி பார்வையும் அடிப்படையாக வைத்து இந்தியாவின் ஏற்றத்திற்கு நீங்கள் ஒவ்வொருவரும் உழைப்பீர்கள். தமிழ்நாட்டிற்கு ஒரு சிறப்பான பெருமையைத் தேடித் தருவீர்கள் என்று நான் நம்புகிறேன்.
ஓய்வு என்பதே கிடையாது...
இனிமேல், உங்களின் வாழ்க்கை மிகவும் பிஸி-ஆக மாறிவிடும். என்னை சுற்றியிருக்கும் ஐ.ஏ.எஸ். அலுவலர்களை பாருங்கள்; எல்லோரையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஓய்வு என்பதே பெரும்பாலும் கிடையாது. அப்படிப்பட்ட எதிர்காலத்தைத் தேர்ந்தெடுத்திருக்கும் உங்களுக்கு நான் தனிப்பட்ட முறையில் ஒரு அட்வைஸ் தர நினைப்பது, அதிகாரிகளாக நீங்கள் நாட்டை கவனிக்க வந்துவிட்டாலும், உங்கள் வீட்டையும் குடும்பத்தையும் அதே அக்கறையுடன் நீங்கள் கவனித்துக்கொள்ள வேண்டும்.
அக்கறையுடன் கேட்க...
எவ்வளவு பிஸியாக இருந்தாலும், உங்கள் அப்பா-அம்மாவிற்கு உங்களுக்கு வாழ்க்கைத் துணை, குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கும் ஒரு 5 நிமிடம் அட்லீஸ்ட் ஒரு ஃபோன்-ஆவது செய்து “சாப்பிட்டீர்களா? மருந்து, மாத்திரை எடுத்துக்கொண்டீர்களா?” என்பதை நீங்கள் அக்கறையுடன் கேட்க வேண்டும். இந்த அக்கறையும், அன்பும்தான் உங்கள் வளர்ச்சிக்கு பெரிய துணையாக இருக்கும். இப்போது, உங்கள் கனவு நிறைவேறிவிட்டது! இனி மக்களின் கனவுகளை நிறைவேற்ற நீங்கள் புறப்படுங்கள். உங்களைப் போல இன்னும் பலரை நம்முடைய திராவிட மாடல் அரசு உருவாக்குவதற்கு தொடர்ந்து துணைநிற்கும் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
தமிழகத்தில் இன்று முதல் வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
11 Mar 2026சென்னை, தமிழகத்தில் இன்று முதல் 15-ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும் என வானிலை
-
குடிமைப் பணி தேர்வில் தேர்ச்சி: 54 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
11 Mar 2026சென்னை, குடிமைப் பணி தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழகத்திலை சேர்ந்த 54 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
-
திருச்சி பஞ்சப்பூரில் மத்திய அரசு சார்பில் விழா; ரூ.5,650 கோடியில் புதிய திட்டங்கள்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
11 Mar 2026திருச்சி, திருச்சி பஞ்சப்பூரில் நடைபெற்ற மத்திய அரசின் விழாவில் சுமார் ரூ.5,650 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டினார்.
-
அடக்கம், மனிதநேயத்தையும் வளர்த்து கொள்ள வேண்டும்: யு.பி.எஸ்.சி. தமிழக வெற்றியாளர்களுக்கு முதல்வர் முதல்வர் ஸ்டாலின் அறிவுரை
11 Mar 2026சென்னை, உங்கள் பணியில் நாட்டைக் கவனித்தாலும் உங்கள் வீட்டையும் குடும்பத்தையும் அதே அக்கறையுடன் கவனித்துக்கொள்ள வேண்டும் என்று யு.பி.எஸ்.சி.
-
தமிழ்நாட்டில் நவீன, வலுவான மின்சார அமைப்பை உருவாக்க அரசு - கலிபோர்னியா பல்கலை., இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையழுத்து
11 Mar 2026சென்னை, தமிழ்நாட்டில் நவீன, வலுவான மற்றும் நிலைத்தன்மை கொண்ட மின்சார அமைப்பை உருவாக்க தமிழ்நாடு அரசு-கலிபோர்னியா பல்கலைக்கழகம் இடையே முதல்வர் மு.க.
-
எல்.பி.ஜி. சிலிண்டர் தட்டுப்பாடு: பார்லி.,யில் விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்
11 Mar 2026புதுடெல்லி, நாடு முழுவதும் எல்.பி.ஜி.
-
அரசுப்பள்ளியில் உணவு சாப்பிட்டு மயக்கமடைந்த பள்ளி மாணவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
11 Mar 2026கோவை, கோவை மாவட்டம் கவுண்டம்பாளையத்தில் உள்ள அரசுப்பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 43 மாணவ - மாணவியருக்கு வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்ட மாணவர்களுக்கு உரிய
-
தமிழ்நாட்டின் பொறுப்பு கவர்னராக ஆர்.வி.ஆர்லேகா் இன்று பதவியேற்பு
11 Mar 2026சென்னை, தமிழ்நாட்டின் பொறுப்பு கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.வி.ஆர்லேகா் இன்று பதவியேற்கவுள்ளார்.
-
ரூ.100 கோடியில் மின்சார, மின்னணு இணைப்பிகள் புதிய உற்பத்தி ஆலை முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஹிரோசே நிறுவனத்துடன் ஒப்பந்தம்
11 Mar 2026சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லியில் ரூ.100 கோடியில், 100 பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் அமையவுள்ள மின்சார / மின்னணு இணைப்பிகள் உற்பத்தி
-
போர் சூழல் காரணமாக மேற்காசியாவில் சிக்கி தவிக்கும் தமிழர்களை பாதுகாப்பாக தாயகம் அழைத்து வர நடவடிக்கை தேவை: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
11 Mar 2026சென்னை, மேற்காசியாவில் தவிக்கும் தமிழ்நாட்டு மக்களைப் பாதுகாப்பாகத் தாயகம் அழைத்து வருவதற்கான சிறப்பு விமானங்கள் உள்ளிட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என
-
ஹார்மூஸ் ஜலசந்தி அருகே ஈரானின் 16 கண்ணிவெடி படகுகளை தாக்கி அழித்தது அமெரிக்கா
11 Mar 2026வாஷிங்டன், ஹார்மூஸ் ஜலசந்தி அருகே ஈரானின் 16 கண்ணிவெடி படகுகளை அமெரிக்க படை அழித்தது.
-
காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு: மாவட்ட எஸ்.பி. நேரில் விசாரணை
11 Mar 2026காரைக்குடி, காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம் எம்.பி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசியது குறித்து சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் விசாரணை நடத்தி வருக
-
கோடைக்காலத்தில் எரிவாயு தேவை கூடும் என்பதால் மின் நிலையங்களுக்கான எரிவாயு விநியோகத்தை உயர்த்த வேண்டும்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
11 Mar 2026சென்னை, மின் நிலையங்களுக்கான எரிவாயு விநியோகத்தைக் கடந்த 6 மாதங்களில் அவர்கள் பயன்படுத்திய அளவில் 65 சதவீதம் என நிர்ணயித்திருப்பதை மறுபரிசீலிக்க கோரி மத்திய பெட்ரோலியத்
-
நவோதயா பள்ளிகளை எதிர்த்து வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல்
11 Mar 2026புதுடெல்லி, தமிழ்நாட்டில் ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் நிறுவ எதிர்ப்பு தெரிவித்த வழக்கில் தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
-
தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது
11 Mar 2026தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் தமிழ்நாடு அரசு தேர்வுத்துறை இயக்ககத்தின் மூலம் நடைபெறும் 2025–2026 ஆம் கல்வியாண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு புதன்கிழமை (மார்
-
சட்டமன்ற தேர்தல் முடியும் வரை நேரில் ஆஜர் ஆக விலக்கு அளிக்க கோரி நீதிமன்றம் செல்கிறார் விஜய்
11 Mar 2026சென்னை, தேர்தல் முடியும் வரை டெல்லியில் சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜர் ஆக விலக்கு அளிக்க வேண்டும் என விஜய் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிகிறது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
11 Mar 2026- மன்னார்குடி ராஜகோபாலசுவாமி பஞ்சமுக அனுமார் மரஉறியில் ராமர் திருக்கோலமாய் காட்சி.
- ஸ்ரீபெரும்புதூர் மணவாள மாமுனிகள் புறப்பாடு.
- திருவாரூர் தியாகராஜர் பவனி.
-
இன்றைய நாள் எப்படி?
11 Mar 2026


