முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கங்கையை அசுத்தப்படுத்தும் தொழிற் சாலைகளை மூட உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 15 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜூலை.16 - கங்கை நதியை அசுத்தப்படுத்தும் 48 தொழிற்சாலைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய நீர்வளம் மற்றும் கங்கை தூய்மைபடுத்துதல் திட்டத்துக்கான இணை அமைச்சர் சந்தோஷ்குமார் கங்வார் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில், கங்கை மற்றும் அதன் துணை நதிகளின் அருகில் அமைந்துள்ள 746 தொழிற்சாலைகள் தினம்தோறும் 501 மில்லியன் லிட்டர் கழிவு நீரை அவற்றில் வெளியேற்றி வருகின்றன என்று மத்திய சுற்றுச்ிசூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் கண்டறிந்துள்ளது.

இவற்றில் 804 தொழிர்சாலைகளில் தேசிய கங்கை நதி வடிகால் ஆணைய அதிகாரிகளால் கடந்த மே மாதம் முதல் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 165 தொழிற்சாலைகளுக்கு விளக்கம் கேட்டு சுற்றிக்கை அனுப்பப்பட்டுள்ளதுடன், 48 தொழிற்சாலைகளை விரைவில் மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது 1978-ஆம் ஆண்டு மாசுக்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு சட்டம் மற்றும் 1986-ஆம் ஆண்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago