முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

ஆயிரம் லிங்கம்

கர்நாடக மாநிலத்தின் வடக்குப் பகுதியில் சீர்சி என்ற ஊரிலிருந்து சுமார் 17 கிலோமீட்டர் பயணம் செய்தால், சால்மலா ஆற்றை அடையலாம். இந்த ஆற்றுக்குள் இருக்கும் பாறைகளில் ஆயிரம் (சஹஸ்ர) லிங்கங்கள் இருக்கின்றன. ஆற்று நீரோட்டம் உள்ள பகுதிகளில்தான் இந்த அத்தனை லிங்கங்களும் உள்ளன. இந்த லிங்கங்கள் அனைத்தும் ஆவுடையாருடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஒருசில லிங்கங்களுக்கு முன்பு நந்தி சிலையும் செதுக்கப்பட்டுள்ளன. இந்த ஆயிரம் லிங்கங்களும் எப்பொழுது உருவாக்கப்பட்டது? யாரால் உருவாக்கப்பட்டது? என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது. இதே போல கம்போடியா நாட்டில் கபல்சியான் என்ற ஊரில் ஓடும் ஆற்றில்தான் ஆயிரம் லிங்கங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இங்கு சிவலிங்கம் தவிர, ராமர், கிருஷ்ணர், லட்சுமி போன்ற சுவாமி சிலைகளும் இருக்கிறது.

இனப்பெருக்க காலத்தின் போது நிறம் மாறும் பறவை எது தெரியுமா?

ஒரு வகை தேனிசிட்டு பறவையில் ஆண் பறவைதான் இவ்வாறு நிறம் மாறுகிறது. இது sunbird எனப்படும் தேன்சிட்டு குடும்பத்தைச் சேர்ந்த சிற்றினமாகும். மலர்களில் தனது நீண்ட அலகை வைத்து தேன் உறிஞ்சி குடிப்பதே இதன் பிரதான பணியாகும். இந்த பறவையினத்தில், ஆண் பறவை நன்கு வளர்ந்து, இனப்பெருக்க காலத்தை எட்டும்போது, அதன் நிறம், தோற்றம் மற்றும் இறகுகள் மிகவும் கவர்ச்சிகரமானதாக மாறும். இனப்பெருக்க காலம் முடிந்த பிறகு, ஆண் பறவையின் கவர்ச்சி மறைந்து, பார்ப்பதற்கு ஒரு பெண் பறவை போல மாறிவிடும். அதாவது, சாதாரண நாட்களில் ஆண், பெண் பறவைகளின் தோற்றத்தில் பெரிய வேறுபாடு இருக்காது. மற்றபடி, அதன் உடல் உறுப்புகளில் எந்த மாற்றமும் ஏற்படாது. இதனை தவறாக புரிந்துகொண்டு, ஆண் பறவை பெண் பறவையாக மாறுகிறது என கூறுவதும் உண்டு.

மின்சக்தியால் தாக்கும் மீன்

'போராக்' என்று அறியப்படுகிற இந்த மின்சார ஈல் மீன் வகை தென் அமெரிக்காவில் காணப்படுகிறது. இதன் நீளம் 2.5 மீட்டர் வரை இருக்கலாம். குறைவான அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்யும் சக்தியுடைய அத்தகைய மீன்களில் சுமார் 250 வகைகள் காணப்படுகின்றன. 'போராக்' வகை விலாங்கு மீன்களே அதிக சக்தி வாய்ந்த மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன. இந்த மின்சார சக்தியை இரையை வேட்டையாடுவதற்கும், தற்காத்து கொள்ளவும் இவை பயன்படுத்தி கொள்கின்றன. இத்தகைய மின்சார விலாங்கு மீன் வகை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தகவலை அமெரிக்காவின் வாஷிங்டனிலுள்ள இயற்கை வரலாற்று தேசிய அருங்காட்சிகத்தின் ஸ்மித்சோனியன் நிலையத்தின் விஞ்ஞானி ஒருவர் 'நேச்சர் கம்யூனிகேஷன்' என்ற அறிவியல் இதழில் உறுதிப்படுத்தியுள்ளார். அவர் மின்சார விலாங்கு மீனின் இரண்டு புதிய வகைகளை கண்டுபிடித்துள்ளார். அதில் ஒன்று 860 வால்ட் மின்சாரத்தை வெளியிடும் சக்தியுடையது. இத்தகைய மீனிடம் இருந்து அதிக அளவிலான மின்சாரம் வெளியிடும் ஆற்றலை பெற்றுள்ளதும் தெரியவந்துள்ளது. இதனால் ஒரு முதலையை கொல்ல முடியும் என்பது கவனிக்கத்தக்கது.

இயற்க்கையின் வரம்

நாம் அன்றாட உணவில் உப்பை சேர்ப்பதால் பல நன்மைகள் உள்ளன. உணவிலுள்ள நச்சுத்தன்மையைப் போக்கும். செரிமானத்தைப் பலப்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும். உடல்நலனுக்கு மேலே, மனநலத்துக்கும் ஒரே நிலைப்பாடுடைய மன உணர்வுகளுக்கும் காரணியாக உப்பு அமைகின்றது. நாம் பயன்படுத்தவது இயற்கையான உப்பாக இருப்பது நல்லது.

ஆண்களின் குணம்

ஆண்கள் தைரியமான மற்றும் தன்னம்பிக்கையுடன் செயல்படும் பெண்களை அதிகம் விரும்புவார்கள். இதன்மூலம், தனக்கு துணையாக வரும் பெண் எப்பொழுதும் தன்னை சார்ந்து இல்லாமல் இருக்க முடியும் என நம்புகின்றனர். எப்போதும் நச்சரித்துக் கொண்டே இருக்கும் பெண்களைக் கண்டால், ஆண்களுக்கு சுத்தமாக பிடிக்காது. புத்திசாலித்தனத்துடன் இருக்கும் பெண்களை பெரிதும் விரும்புவர்.

மூட்டுகள் பலப்பட

எலும்பு மூட்டுகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், முதலில் சரியான உடல் எடையைப் பராமரிக்க வேண்டும். அழற்சி எதிர்ப்பு உணவுகளான ஆலிவ் ஆயில், முழு தானியங்கள் போன்றவற்றை அன்றாட உணவுகளில் சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும், வைட்டமின் மற்றும் கனிமச்சத்து மாத்திரைகளை வாங்கி சாப்பிட வேண்டும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago