முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

உற்ற நண்பன்

மிரோ எனப் பெயரிடப்பட்டுள்ள ரோபோ முதியோர், நோயாளிகளுக்கு உதவும் விதமாக லண்டனில் உருவாக்கப்பட்டுள்ளது. நாய், பசு, ஆடு போன்ற உருவத்தில் உள்ள இந்த ரோபோ முதியவர்கள், நோயாளிகள், ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு பேச்சுத் துணையாக செயல்படுகிறது.

ராட்சத பென்குயின்கள்

பென்குயின்கள் சுமார் 6 கோடியே 50 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது டைனோசர் இருந்த காலத்திலேயே வாழ்ந்ததாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. பென்குயின்கள் ராட்சத வடிவில் இருந்துள்ளன. நியூஸிலாந்து நாட்டில் வைப்பாரா எனும் நகரத்தில் வாழ்ந்த பென்குயின்கள், சுமார் 150 செமீ உயரத்துடன் வாழ்ந்ததாக புதை படிவங்களில் இருந்து உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்தகைய உயரமான, 17 பென்குவின் இனங்கள் இயற்கையின் காலநிலை மாற்றம், பேரழிவுகளால் அழிந்ததாம். ஆனால், இப்போது உள்ள பென்குயின்கள் வெறும் 43 சென்டிமீட்டர் உயரத்துடனே உள்ளன. இதன் சராசரி ஆயுட்காலம் 20 ஆண்டுகள்.

உலகின் மிக விலையுயர்ந்த மசாலா

உலகின் மிக விலையுயர்ந்த மசாலா 'சிவப்பு தங்கம்' (Red Gold) என்று அழைக்கப்படுகிறது. தற்போது, ​​இந்த மசாலாவின் விலை, கிலோ ஒன்றுக்கு 2.5 லட்சம் முதல், 3 லட்சம் ரூபாய் வரை என்பது ஆச்சரியம் அளித்தாலும் உண்மையான விலை தான் இது. செடிகளில் இருந்து கொய்யப்படும் சுமார் ஒன்றரை லட்சம் பூக்களில் இருந்து ஒரு கிலோ குங்குமப்பூ கிடைக்கிறது. ஒரு பூவில் இருந்து மூன்று குங்குமப்பூ மட்டுமே கிடைக்கும் என்பது ஆச்சரியமான தகவல் ஆகும். 

ஆயுள் கூடும்

ஒரு நபருக்கு நாள் ஒன்றுக்கு 15 மி.லி., - 20 மி.லி., போன்று ஒரு மாதத்திற்கு அரை லிட்டர் தான் எண்ணெய் பயன்படுத்த வேண்டும். அதிக எண்ணெய் எடுப்பதால் அவை இரத்த குழாய்களில் படிந்து ரத்த குழாய் அடைப்பு ஏற்படுகிறது. அதிக எடை, அதிக கொலஸ்ட்ரால், கல்லீரல் பாதிப்பு, இதய நோய், இரத்த குழாய் அடைப்பு, சர்க்கரை நோய் ஆகியன ஏற்படுகின்றன. 

உணவில் கவனம்

காரமான உணவுகள், இரைப்பையில் அமில சுரப்பை அதிகரித்து உடலை பரபரப்புடன் இருக்க செய்வதால் கோபத்தை ஏற்படுத்தும். எண்ணெயில் பொரித்த உணவுகளை உட்கொள்வது, காபி அல்லது டீயை ஒரு நாளில் அதிகளவு பருகுதல், பிஸ்கட், சிப்ஸ், சூயிங் கம் மற்றும் செயற்கை சுவையூட்டிகள், ஆல்கஹால் ஆகியவை கோபத்தை ஏற்படுத்தும்.

மனிதர்களுக்கு நீல நிறக்கண்கள் எப்போது தோன்றின?

உலக அழகி பட்டம் பெற்ற ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல்வேறு நபர்களுக்கும் நீல நிற கண்கள் இருப்பதை நாம் பார்த்திருப்போம். உள்ளூர் வழக்கில் இதை நாம் பூனைக் கண் என்று குறிப்பிடுவோம். சுமார் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை உலகம் முழுவதும் மனிதர்களுக்கு பொதுவாக அடர் பழுப்பு நிற கண்களே காணப்பட்டன. கருங்கடல் பகுதியில் உள்ள மனிதர்களிடம் மரபணுவில் ஏற்பட்ட ஒரு சிறிய மாற்றம் காரணமாக அடர் பழுப்பு நிறத்திலிருந்து நீல நிறக் கண்கள் உருவாகின. இது பின்னர் படிப்படியாக பல்வேறு பிரதேசங்களுக்கும் பரவின. தற்போது உலக மக்கள் தொகையில் சுமார் 8 சதவீதம் பேர் பூனை கண் எனப்படும் நீல நிற கண்களுடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony