முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

உங்களை கேள்வி கேட்கும்

தற்போது, மனித மூளையில் உருவாக்கப்படும் அலைகளை உணர்ந்து செயற்படக்கூடிய ரோபோக்களை ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர். இதன்மூலம் இருந்த இடத்திலிருந்தே தமது எண்ணங்களால் ரோபோக்களுக்கு மனிதர்கள் கட்டளை இட முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனை எம்ஐடி பல்கலைக்கழகத்தின் கணிப்பொறி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆய்வுக்கூட ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர். அதேப்போல் மனிதர் களிடம் கேள்வி கேட்க கூடிய புதிய வகை ‘ரோபோ’ க்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. பணியில் ஈடுபடும் ‘ரோபோ’ குழப்பமான சூழ்நிலையில் தனது சந்தேகங்களை புத்திசாலி தனமாக கேள்விகளாக கேட் கும் வகையில் அது வடிவமைக்கப்பட்டுள்ளது.

கழிவுகள் மின்சக்தியாக ...

நுண்ணுயிர் எரிபொருள் செல்களைப் பயன்படுத்தி மின்சாரத்தை மின்சக்திக்கு மாற்றும் புதிய முறையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். குறைவான அளவு சிறுநீரில் ஸ்மார்ட்போன்கள் ஆறு மணி நேரம் சார்ஜ் ஆகும். ஆனால் இந்த முறை மூலமாக ஸ்மார்ட்போனுக்கு மூன்று மணி நேரத்தில் சார்ஜ் செய்ய முடியுமாம். இதற்காக நுண்ணுயிர் எரிபொருள் செல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. நாம் இயற்கையாக உற்பத்தி செய்யும் கழிவுகளை நுண்ணுயிரிகள் நேரடியாக மின்சாரமாக மாற்றுகிறது. அவை துணைப்பொருளாக எலக்ட்ரான்களை தயாரிக்கின்றன. எலக்ட்ரான்கள் உற்பத்தி ஆவதன் மூலம் மின்சாரம் உருவாகிறது. இந்த நுண்ணுயிரிகள் 30 முதல் 40 மில்லிவாட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன. இது ஸ்மார்ட்ஃபோன், சிறிய விளக்குகளை சார்ஜ் செய்ய போதுமானதாகும்" என்றார்.

முகம் பார்க்கும் கண்ணாடி முதன்முதலில் எப்போது தோன்றியது?

1835 இல். ஜெர்மனியைச் சேர்ந்த வேதியிலாளர் ஜஸ்டுஸ் வோன் லைபிக் என்பவர்தான் கண்ணாடியின் பின்புறம் சில ரசாயன கலவையை பூசுவதன் மூலம் அசலான முகம் பார்க்கும் கண்ணாடியை உருவாக்கியவர். இவர்தான் அமோனியாவில் சில்வர் நைட்ரேட்டை கலந்து கண்ணாடியின் பின்புறம் பூசி அதன் எதிரொளிப்பு தன்மையை உலகுக்கு காட்டியவர். அப்போது முதல் நாம் நமது முகங்களை இடைவிடாமல் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறோம்.

குறையாத மோகம்

உலகில் ‘செல்பி’ எடுக்கும்போது இறந்தவர்களின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. ஆபத்தான இடங்களில் ‘செல்பி’ எடுக்கும் பழக்கத்தினால், இந்தியாவில் 76 பேர் மரணமடைந்துள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த கார்நிகி மெலன் பல்கலைக்கழக ஆய்வு குழு தெரிவித்துள்ளது. இறந்தவர்களில் பலர் இளம் வயதினர்.

அதிசய மனிதர்

சுவிட்சர்லாந்தின் ஷூரிச் நகரை சேர்ந்தவர் டிம்ஸ்டெய்னர், இவர் பலவிதமான பச்சை குத்திக் கொண்ட தனது முதுகு தோலை 2008-ம் ஆண்டில் ஜெர்மனி கண்காட்சி அமைப்பாளர் ஒருவரிடம் விற்பனை செய்து விட்டார். தற்போது கண்காட்சிகளில் தன்னை காட்சி பொருளாக்கி வரும் அவர், மறைவுக்கு பின்னும் அவருடைய தோல் நிரந்தரமான காட்சி பொருளாக உள்ளதாம்.

கடல் மட்டத்துக்கும் கீழே...

தமிழகத்திற்கு தஞ்சை இருப்பது போல, கேரளத்தின் நெற்களஞ்சியமாக உள்ள குட்டநாட்டில், அலைகள் எழாத 'backwaters' எனப்படும் உப்பங்கழி நீரோடைகள் இருக்கின்றன. ஆழப்புழா, பத்தனம்திட்டா, கோட்டயம் மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த குட்டநாடு, கடல் மட்டத்தில் இருந்து 4-10 அடிகள் வரை கீழ் உள்ளது. உலகிலேயே அதிகளவு கடல்மட்டத்திற்கு கீழ் விவசாயம் செய்யப்படும் பகுதி இதுவே. ஆண்டு முழுவதும் விவசாயம் நடக்கும் இங்கு, நெல், வாழை ஆகியன முதன்மையாக பயிரிடப்படுகின்றன. பம்பை ஆறு, மீனச்சிலாறு, அச்சன்கோவில் ஆறு, மணிமாலா ஆறு ஆகிய நான்கு பெரிய ஆறுகள் குட்டநாட்டில் பாய்கின்றன. குட்டநாட்டில் படகுகளே பிரதான போக்குவரத்துக்கு பயன்படுகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்