முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

மிகவும் அரிய வகை இளம் சிவப்பு நிற வெட்டுக்கிளி

மிகவும் அரிய வகை இளம் சிவப்பு நிற வெட்டுக்கிளி அமெரிக்காவின் கிழக்கு டெக்சாஸ் மாகாணத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. சுற்றுச் சூழல் ஆய்வாளரான டிர்க் பார்க்கர் என்ற 33 வயது இளைஞர் இதை கண்டுள்ளார். அவருக்கு தொடக்கத்தில் இது எத்தனை அரியது என்பது தெரிந்திருக்கவில்லை. பின்னர் பூச்சி இனங்கள் தொடர்பாக கூகுளில் தேடிய போதுதான் இது அரிய வகை என்பது தெரியவந்தது என்கிறார். மரபணுவில் ஏற்படும் எரித்ரிசைம் என்பதன் காரணமாக இந்த நிற மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. தற்போது அதை தனது வீட்டில் செல்லப்பிராணியாக வைத்திருக்கிறார் பார்க்கர்.

செவ்வாய் கிரகத்தில் தொடர்ந்து கேட்பது ஏலியனின் குரலா?

செவ்வாய் கிரகத்தில் நாசாவின் இன்சைடர் விண்கலம் இரு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தகவலை அனுப்பியது. அதில் செவ்வாய் கிரகத்தில் இருந்து தொடர்ந்து ஒரு வித மர்மமான ஒலி தொடர்ந்து இருந்து வருவதை அது பதிவு செய்து அனுப்பியுள்ளது. இது அங்கு வேற்றுகிரக வாசிகள் எனப்படும் ஏலியன்களின் எழுப்பும் ஒலியா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இருந்த போதிலும் இதை விஞ்ஞானிகள் இதுவரை அதை உறுதி செய்யவில்லை என்ற போதிலும் செவ்வாயிலிருந்து எழும் ஒலியின் மர்மம் தொடர்ந்து நீடித்து வருகிறது என்பதுதான் ஆச்சரியமானது.

பனிஉருகும் அபாயம்

பூமிப்பந்தின் தென்கோடியில் அமைந்துள்ள அண்டார்டிகா முழுவதும் பனிப்பாறைகளைக் கொண்ட கடல் ஆகும். கிரீன்ஹவுஸ் வாயுக்களாலும், வெப்பமயமாகும் கடலாலும் காலநிலை மாற்றம் ஏற்பட்டு துருவப்பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருகி வரும் வேளையில், மேற்கு அண்டார்டிகாவில் 91 புதிய எரிமலைகள் இருப்பதை சமீபத்தில் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இவற்றின் மூலம் எப்போது வேண்டுமானாலும் பனிப்பாறைகளுக்கு பாதிப்பு வரலாம். இதனால் பனி உருகி கடல் மட்டம் உயரும் அபாயமும் உள்ளது. இது உலகிற்கு மிக முக்கியமான எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது. மேலும், இந்த நூற்றாண்டு பூமியின் தென் துருவத்திற்கு அவ்வளவு சிறப்பானதாக இருக்காது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். வருவதாக ஆய்வாளர்கள் தொடர்ச்சியாகக் கூறி வருகின்றனர்.

புகைப்பதால் மரணம்

195 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் உலகளவில் நடைபெறும் மொத்த மரணங்களில் 11 சதவீதம் புகை பிடிக்கும் பழக்கத்தால் ஏற்படுகிறதாம். இதன் காரணமாக உயிரிழப்போர் நாடுகள் பட்டியலில் இந்தியா  2-வது இடத்தில் உள்ளது. சீனா முதலிடத்தையும், அமெரிக்கா, ரஷ்யா 3 மற்றும் 4-வது இடத்தைப் பிடித்துள்ளன.

மிக பிரம்மாண்டம்

வடகொரியாவை அச்சுறுத்த அமெரிக்கா தற்போது அனுப்பியுள்ள போர் கப்பலான கார்ல் வின்சன் அமெரிக்காவின் கப்பற்படைக்கான அதிகாரங்களை உருவாக்கியவர்களில் ஒருவரான கார்ல் வின்சனை நினைவுகூறும் விதமாக அவரது பெயர் வைக்கப்பட்டது. இதன் எடை 102,900 டன். அணு ஏவுகணைகள் பொருத்தப்பட்ட விமானங்கள் நிறுத்தப்படக்கூடிய முக்கியமான கப்பல்களில் கார்ல் வின்சனும் ஒன்று. மேலும் அமெரிக்காவின் முக்கிய போர் விமானங்களில் முதன்மையான எஸ்.ஹெச்.60 சீஹாக் ஹெலிகாப்படரை கொண்டு நிறுத்தும் அளவிற்கு இது இடவசதிக்கொண்டது. ஒருமுறை எரிவாயு நிரப்பப்பட்டால், கார்ல் வின்சன் கப்பலை தொடர்ந்து 20 ஆண்டுகள் வரை பயன்படுத்த முடியும். இப்படி ஒரு பிரம்மாண்டமான கார்ல் வின்சன் கப்பலை இயக்க மட்டும் கிட்டத்தட்ட 5680 பேர் தேவைப்படுவர்.

தன்னையே ரூ.40 லட்சத்துக்கு விற்க முயன்ற நைஜீரிய வாலிபர் கைது

ஆடு, மாடுகளை விற்பது போல மனிதர்களை விற்பனை செய்வது உலகம் முழுவதும் தடை செய்யப்பட்டுள்ள ஒன்றாகும். இந்தியா போன்ற ஒரு சில நாடுகளில் அரிதான வன விலங்குகளை வளர்ப்பதும், விற்பதும் சட்டப்படி குற்றம். ஆனால் நைஜீரியாவின் வடக்கு பகுதியில் உள்ள கனோ மாகாணத்தின் Kaduna நகரில் உள்ள 26 வயதான Aliyu Na Idris என்ற வாலிபர் ஒருவர் தன்னையே விற்பனை செய்வதாக விளம்பரம் ஒன்றை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். இதன் மூலம் அந்த செய்தி உலகம் முழுவதும் வைரலானது. இந்திய மதிப்பில் சுமார் 40 லட்சம் விலை என்று போர்டில் எழுதி அதை கையில் பிடித்தபடி படத்துக்கு போஸ் கொடுத்தார். தனக்கு கிடைக்கும் பணத்தைக் கொண்டு தனது தாயார் மற்றும் குடும்பத்தினருக்கு அவர் உதவ முடியும் என்று நம்பினார். இதையடுத்து தகவல் அறிந்த போலீஸார் விரைந்து சென்று அவரை கைது செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony