முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

நவீன சோப்

சுற்றுச்சூழலுக்கு தீங்கற்ற நவீன சோப் ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி உள்ளனர். சோயா பீன்ஸ், தேங்காய் போன்றவற்றின் கொழுப்பு அமிலங்கள், மக்காச்சோளத்தில் இருந்து பெறப்படும் சர்க்கரை உள்ளிட்ட பொருட்களின் கலவையால் தயாரிக்கப்படுகிறது. இந்த சோப்பின் ஓ.எப்.எஸ். எனப்படும் மூலக்கூறுகளால் குறைந்த அளவிலான சோப்பை பயன்படுத்தி அதிகமான கறைகளை அகற்றலாம்.

விநோத திருமணம்

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாநிலத்தில் உள்ள பால்டிமோர் நகரை சேர்ந்தவர் கிறிஸ்டின் வாக்னர் என்ற பெண் பீட்சாவின் மேல் உள்ள விருப்பத்தால், அதை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். அதன்படி திருமண கோலத்தில் ஆடையை உடுத்திக்கொண்டு, பீட்சாவுக்கும் டை கட்டி மாப்பிள்ளை போன்று அலங்கரித்துள்ளார். இதன் பின்னர் பீட்சாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவேற்றி, எனக்கு திருமணம் நடந்துவிட்டது, ஆண்களே என்னை மன்னித்துவிடுங்கள் என கூறியுள்ளார்.  இதனைப்பார்த்த புகைப்படக் கலைஞர் ஒருவர் போட்டோ ஷீட் ஒன்றினையும் நடத்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.இது போல் ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு பெண் கடந்த  2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

அழியும் ஆபத்தில்...

இந்தியாவில் தற்போது 780 மொழிகளில், 400 மொழிகள் அடுத்த 50 ஆண்டுகளில் அழிந்துவிடும் அபாயம் உருவாகியுள்ளது என தி பீப்பில்ஸ் லிங்குஸ்டிக் சர்வே ஆப் இந்தியா மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், ஒவ்வொரு மொழி அழியும்போதும், அந்த கலாச்சாரமும் அழியும் ஆபத்துள்ளதாக அது தெரிவிக்கிறது.

ஒற்றைக் காலில் ....

நாரைகள் ஒற்றைக் காலில் நிற்பதற்கு காரணம் தற்போது தெரியவந்துள்ளது. உடலின் சக்தியை சேமிக்க அவை ஒற்றைக்காலில் நிற்கின்றனவாம். உடலின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தி நீண்ட நேரம் நிற்கும் வகையில் நாரைகள் இவ்வாறு நிற்கின்றதாம். ஒற்றைக்காலில் நிற்கும்போது அவைகளின் உடலில் மற்ற எந்த தசைகளும் செயல்படுவதில்லை என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

புதிய வசதி

ஜிஃப் - கிராஃபிக் இன்டர்சேஞ்ச் ஃபார்மேட்,  ஜூன் 15, 1987-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்காவை சேர்ந்த மென்பொறியாளரான ஸ்டீவ் வில்வைட் என்பவர் கண்டறிந்த ஜிஃப்களின் 31-வது பிறந்த தினத்தை பேஸ்புக் கொண்டாடுகிறது. அந்த வகையில் பேஸ்புக் கமெண்ட்களில் ஜிஃப்களை பயன்படுத்தும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 1300 கோடி ஜிஃப்கள் மெசன்ஜர் மூலம் அனுப்பப்பட்டதாம்.

மிகவும் உயரமான இடத்தில் கிரிக்கெட் மைதானம்

உலகிலேயே மிகவும் உயரமான இடத்தில் கிரிக்கெட் மைதானம் எங்கே அமைந்துள்ளது தெரியுமா.. அதுவும் இந்தியாவில்தான். ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள சைல் என்ற இடத்தில் அமைந்துள்ள கிரிக்கெட் மைதானம் தான் உலகிலேயே அதிக உயரமான இடத்தில் அமைந்துள்ள கிரிக்கெட் மைதானமாகும். இது 1893 இல் உருவாக்கப்பட்டது. இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 7500 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்