எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய கண்காணிப்பு குழு அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள மத்திய கண்காணிப்பு குழு அலுவலர்களான மத்திய ஊரக வளர்ச்சித்துறை துணை செயலாளர் எஸ்.பி.திவாரி, மத்திய நீர்வளத்துறை இயக்குநர் ஆர்.அழகேசன் ஆகியோர், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வறட்சியின் காரணமாக ஏற்பட்டுள்ள பயிர் பாதிப்புகள் குறித்து நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து விவசாயிகளிடத்தில் பாதிப்பு குறித்த விவரங்களை கேட்டறிந்தார்கள். தமிழ்நாடு அரசு வேளாண்மைத்துறை இயக்குநர் வி.தட்ஷிணாமூர்த்தி அவர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர் முனைவர் ச.நடராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.
மத்திய கண்காணிப்பு குழு அலுவலர்கள் முதலாவதாக ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ஊராட்சி ஒன்றியம், கடுகுசந்தை கிராமத்தில் விவசாயிகளின் மூலம் பயிரிடப்பட்டு வறட்சியின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள கம்பு பயிர்களையும், கடலாடி ஊராட்சி ஒன்றியம், கடுகுசந்தை சத்திரம் கிராமத்தில் விவசாயிகளின் மூலம் பயிரிடப்பட்டு வறட்சியின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நிலக்கடலை பயிர்களையும், கீழச்செல்வனூர், கீழக்கிடாரம் ஆகிய கிராமங்களில் விவசாயிகளின் மூலம் பயிரிடப்பட்டு வறட்சியின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நெற் பயிர்களையும், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், பனையடியேந்தல் கிராமத்தில் விவசாயிகளின் மூலம் பயிரிடப்பட்டு வறட்சியின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மிளகாய் பயிர்களையும், நல்லான்குடி கிராமத்தில் விவசாயிகளின் மூலம் பயிரிடப்பட்டு வறட்சியின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர்களையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து விவசாயிகளிடத்தில் பயிர் பாதிப்பு குறித்த விவரங்களை நேரடியாக கேட்டறிந்தார்கள்.
அதன்பின்பு மத்திய நீர்வளத்துறை இயக்குநர் ஆர்.அழகேசன் செய்தியாளர்களிடத்தில் தெரிவித்ததாவது:- தமிழகத்தில் பெரும்பான்மையான பகுதிகளில் போதிய அளவு வடகிழக்கு பருவமழை பெய்யாத காரணத்தினால் வறட்சி ஏற்பட்டு விவசாயிகள் மூலம் பயிரிடப்பட்டுள்ள பல்வேறு வகையான பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பயிர்பாதிப்பு குறித்த விவரங்களை நேரடியாக கள ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய வறட்சி நிவாரணத் தொகை வழங்கிட ஏதுவாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நேரடியாகச் சென்று ஆய்வு செய்திட 4 மத்திய கண்காணிப்பு குழுக்களின் கீழ் மொத்தம் 10 மத்திய கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்தவகையில் நேற்றைய தினம் விருதுநகர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலும், இன்றைய தினம் தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலும், தொடர்ச்சியாக 25.01.2017 அன்று புதுக்கோட்டை மாவட்டத்திலும் எங்கள் தலைமையிலான மத்திய கண்காணிப்பு குழு பயிர் பாதிப்பு குறித்த விவரங்களை ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் மூலம் மொத்தம் 1லட்சத்து 22ஆயிரத்து 32 ஹெக்டேர் பரப்பளவில் நெற்பயிர்களும், 5ஆயிரத்து 571 எக்டேர் பரப்பளவில் சிறுதானியங்களும், 4ஆயிரத்து 113 எக்டேர் பரப்பளவில் பயிர் வகைகளும், 15ஆயிரத்து 22 எக்டேர் பரப்பளவில் மிளகாய் பயிர்களும், 3 ஆயிரத்து 655 ஹெக்டேர் பரப்பளவில் எண்ணெய்வித்து பயிர்களும், ஆயிரத்து 568 ஹெக்டேர் பரப்பளவில் கொத்தமல்லி உள்பட பருத்தி, கத்தரி, வெங்காயம் என மொத்தம் 1லட்சத்து 53ஆயிரத்து 397 எக்டேர் பரப்பளவில் பல்வேறு பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் வறட்சி நிவாரணத்திற்காக இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள கள ஆய்வுகளின் அடிப்படையில் 1லட்சத்து 21ஆயிரத்து 790 எக்டேர் பரப்பளவிலான நெற்பயிர்களும், 14ஆயிரத்து 421 எக்டேர் பரப்பளவிலான மிளகாய் பயிர்களும், 5ஆயிரத்து 496 எக்டேர் பரப்பளவிலான சிறுதானியப் பயிர்களும், 4ஆயிரத்து 79 எக்டேர் பரப்பளவிலான பயிர்வகைகளும், 3ஆயிரத்து 348 எக்டேர் பரப்பளவிலான எண்ணெய்வித்து பயிர்களும், ஆயிரத்து 506 ஹெக்டேர் பரப்பளவிலான கொத்தமல்லி உள்பட பருத்தி, கத்தரி, வெங்காயம் என மொத்தம் 1லட்சத்து 50ஆயிரத்து 879 எக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள பல்வேறு பயிர்கள் வறட்சியின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன. இது பயிரிடப்பட்டுள்ள மொத்த பரப்பளவில் 98சதவீதம் ஆகும். நடப்பு ஆண்டில் பிரதம மந்திரியின் புதிய பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இதுவரை 1,10,626 ஹெக்டேர் பரப்பில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்களுக்கு 1,15,312 விவசாயிகளின் மூலமாகவும், 6,756 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டள்ள மிளகாய் பயிர்களுக்கு 8,507 விவசாயிகளின் மூலமாகவும் பயிர்க்காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இத்தகைய சூழ்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பயிர் பாதிப்பு குறித்த அனைத்து விவரங்களும் எங்களது மத்திய குழுவின் தலைமைக்கு அறிக்கையாக சமர்பிக்கப்பட்டு அதனடிப்படையில் மதிப்பீடு செய்து விவசாயிகளின் நலனுக்காக விரைவில் வறட்சி நிவாரணம் மற்றும் பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகை பெற்றிடும் விதமாக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு தெரிவித்தார். இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் மு.அலி அக்பர், பரமக்குடி சார் ஆட்சியர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன்,வேளாண்மைத்துறை இணை இயக்குநர் ஆர்.அரிவாசன், கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் தி.மோகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வி.எஸ்.வெள்ளைச்சாமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் தமிழ்வேந்தன் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
தே.ஜ.கூட்டணியில் டி.டி.வி.தினகரன், பிரேமலதாவை இழுக்க இறுதி முயற்சி
20 Jan 2026சென்னை: அ.ம.மு.க., தே.மு.தி.க.
-
இன்று த.வெ.க. தேர்தல் பிரச்சார குழுவின் ஆலோசனைக் கூட்டம்
20 Jan 2026சென்னை: த.வெ.க. பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- அனைவருக்கும் வணக்கம்.
-
234 தொகுதிகளிலும் நானே நிற்பதாக நினைத்து வரும் தேர்தலில் 100 சதவீதம் களப்பணியாற்ற வேண்டும் மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
20 Jan 2026சென்னை: 234 தொகுதிகளிலும் நானே நிற்பதாக நினைத்து தேர்தலில் 100 சதவீதம் களப்பணியாற்ற வேண்டும் என மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
-
பிரான்ஸ் அதிபர் பதவியில் இருந்து மேக்ரான் விரைவில் நீக்கப்படுவார்: அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பேச்சு
21 Jan 2026வாஷிங்டன், அமைதி வாரியத்தில் இணையாவிட்டால் 200 சதவீதம் வரி விதிப்போம் என்று பிரான்சுக்கு அதிபர் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
-
தவறாக மந்திரம் புரோகிதர்: சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ குறித்து அரசு விளக்கம்
21 Jan 2026சென்னை, கிளி ஜோசியர் புரோகிதம் ஓதியது போன்று தற்போது சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ குறித்து தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்த டி.டி.வி.தினகரன்-இ.பி.எஸ். சந்திப்பார்களா..?
21 Jan 2026சென்னை, மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை டி.டி.வி.தினகரன் சந்தித்து கூட்டணியில் இணைந்திருப்பது அரசியலில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
-
தே.மு.தி.க. யாருடன் கூட்டணி? பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
21 Jan 2026சென்னை, தே.மு.தி.க. யாருடன் கூட்டணி என்பது குறித்து பிரேமலதா விஜயகாந்த் விளக்கமளித்துள்ளார்.
-
கூட்டணிக்கு வரவேற்று வாழ்த்திய இ.பி.எஸ்.க்கு டி.டி.வி.தினகரன் நன்றி
21 Jan 2026சென்னை, கூட்டணிக்கு மனதார வரவேற்று வாழ்த்திய இ.பி.எஸ்.க்கு டி.டி.வி.தினகரன் நன்றி தெரிவித்துள்ளார்.
-
தேர்தலில் யாருடன் கூட்டணி: ராமதாஸ் திடீர் ஆலோசனை
21 Jan 2026சென்னை, சட்டசபை தேர்தல் நெருங்குவதை தொடர்ந்து தேர்தல் கூட்டணி குறித்து ராமதாஸ் ஆலோசனை நடத்தினார்.
-
தி.மு.க.வில் இணைந்தது ஏன்? வைத்திலிங்கம் விளக்கம்
21 Jan 2026சென்னை, ஓ பன்னீர் செல்வத்தின் தீவிர ஆதரவாளராக இருந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்.
-
இந்திய விண்வெளி நிலையத்தை உருவாக்க உள்நாட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தது இஸ்ரோ
21 Jan 2026சென்னை, இந்தியா தனது சொந்த விண்வெளி நிலையமான பாரதிய அந்தரிக்ஷ் நிலையத்தை (பி.ஏ.எஸ்.) கட்டுவதில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அதற்கான நடவடிக்கைகளில்
-
மத்திய அரசு ஊழியர்கள் மீதான ஊழல் வழக்கை மாநில காவல்துறையும் விசாரிக்கலாம்:
21 Jan 2026மத்திய அரசு ஊழியர்கள் மீதான ஊழல் வழக்கை இனி மாநில காவல்துறையும் விசாரிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
பா.ஜ.க.வில் உட்கட்சி ஜனநாயகம் இல்லை: காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு
21 Jan 2026புதுடெல்லி, பா.ஜ.க.வில் உட்கட்சி ஜனநாயகம் இல்லை, நிதின் நபீன் தலைவரானது குறித்து காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டியுள்ளது.
-
இந்தியாவின் வளர்ச்சி பாதையில் திரிபுரா பெரும் பங்கு வகிக்கிறது பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
21 Jan 2026புதுடெல்லி, இந்தியாவின் வளர்ச்சி பாதையில் திரிபுரா மாநிலம் பெரும் பங்கு வகிக்கிறது என்று அம்மாநிலம் உருவான தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.&n
-
கரீபியன் கடலில் சென்றுகொண்டிருந்த கச்சா எண்ணெய் கப்பலை பறிமுதல் செய்த அமெரிக்கா
21 Jan 2026வாஷிங்டன், கரீபியன் கடலில் சென்றுகொண்டிருந்த கச்சா எண்ணெய் கப்பலை அமெரிக்கா பறிமுதல் செய்துள்ளது.
-
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 7 தமிழ்நாடு மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை
21 Jan 2026சென்னை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 7 தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
-
அசாமில் மீண்டும் வன்முறை: ஒருவர் உயிரிழப்பு-செல்போன், இணையதள சேவை துண்டிப்பு
21 Jan 2026கவுகாத்தி, அமாமில் மீண்டும் வன்முறை சம்பவம் நடைபெற்றதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் அங்கு செல்போன், இணையதள சேவை துண்டிக்கப்பட்டது.
-
மீண்டும் கூட்டணிக்குள் டி.டி.வி.தினகரன்: மூத்த நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்திய இ.பி.எஸ்.
21 Jan 2026சென்னை, தே.ஜ.கூட்டணியில் மீண்டும் டி.டி.வி.தினகரன் இணைந்துள்ள நிலைியல் மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி நேற்று அவசர ஆலோசனை நடத்தினார்.
-
தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம் ஒரேநாளில் ரூ.4,120 அதிகரிப்பு
21 Jan 2026சென்னை, தங்கம் விலை நேற்று புதிய உச்சத்தை தொட்டு விற்பனையானது.
-
வைத்திலிங்கம் ராஜினாமா எதிரொலி: தமிழ்நாட்டில் எம்.எல்.ஏ. காலியிடம் 5 ஆக உயர்வு
21 Jan 2026சென்னை, தமிழக சட்டசபைக்கு அடுத்த 2 மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வைத்திலிங்கம் ராஜினாமா: எம்.எல்.ஏ. காலியிடம் 5 ஆக உயர்ந்துள்ளது.
-
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவை படுகொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை
21 Jan 2026டோக்கியோ, ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவை படுகொலை செய்த யமகாமிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே த.வெ.க.வுக்கு பொதுச்சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்க வாய்ப்பு
21 Jan 2026புதுடெல்லி, தேர்தல் ஆணையத்திடம் த.வெ.க. அளித்த விண்ணப்பம் பரிசீலனையில் உள்ளதால் கட்சிக்கு பொதுச் சின்னம் கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
பிரதமர் மோடி வருகை எதிரொலி: செங்கல்பட்டில் 3 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை
21 Jan 2026செங்கல்பட்டு, பிரதமர் வருகையையொட்டி கிண்டி, மீனம்பாக்கம் ஆகிய பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
-
பிரதமர் மோடியால் அசாமின் உலக புகழ் பெற்றது 'பகுரும்பா' நடனம்
21 Jan 2026புதுடெல்லி, உலக புகழ் பெற்ற பகுரும்பா நடனத்தை பிரதமர் மோடியின் சமூக ஊடகத்தில் இருந்து 20 கோடி பார்வையாளர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர்.
-
ஒரே நாளில் 463 கைதிகளுக்கு பாட்னா உயர் நீதிமன்றம் ஜாமீன்
21 Jan 2026பாட்னா, ஒரே நாளில் 300 பேருக்கு ஜாமீன் வழங்கியதே இதற்கு முன்பு சாதனையாக இருந்த நிலையில் தற்போது, பாட்னா ஐகோர்ட் 463 கைதிகளுக்கு ஜாமீன் வழங்கியது புதிய சாதனை படைத்துள்ளத


