முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீலகிரியில் அம்மா திட்டம் நடைபெறும் இடங்கள்

வியாழக்கிழமை, 2 பெப்ரவரி 2017      நீலகிரி

நீலகிரி மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம்கள் இன்று(3_ந் தேதி) நடைபெறுகிறது. இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

                                   அம்மா திட்ட முகாம்

நீலகிரி மாவட்டத்தில் அம்மா திட்டம் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெற்று வருகிறது. இதில் முதியோர் ஓய்வூதியத்தொகை, விதவை உதவித்தொகை, நலிந்தோர் உதவித்தொகை, உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை, புதிய உழவர் அட்டை, வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும் வருமான சான்று, சாதி சான்று, விதவை சான்று மற்றும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பெயர்சேர்த்தல், நீக்குதல் போன்ற மக்கள் நல பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தோட்டக்கலைத்துறை, சமூக நலத்துறை, மின்வாரியம் மற்றும் வளர்ச்சித்துறை சார்ந்த குறைகள் கேட்டு குறை நிவர்த்தி செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம்.

                              1_ம் வெள்ளிக்கிழமை

இத்திட்டமானது பிப்ரவரி மாதம் 1ம் வெள்ளிக்கிழமையான இன்று(3_ந் தேதி) ஊட்டி வட்டத்தில் அணிக்கொரை சமுதாய கூடம், குன்னூர் வட்டத்தில் முசாபுரி அங்கன்வாடி மையம், கோத்தகிரி வட்டத்தில் பாரதிநகர் சமுதாயகூடம், குந்தா வட்டத்தில் கோரகுந்தா சமுதாய கூடம், கூடலூர் வட்டத்தில் முதுகுளி பஞ்சாயத்து அலுவலகம், பந்தலூர் வட்டத்தில் உப்பட்டி அரசு ஆரம்பப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. எனவே அந்தந்த பகுதி மக்கள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago