எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ராமநாதபுரம்,-ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு பிரதமரின் புதிய பயிர் காப்பீடு திட்டத்தில் ரூ.354 கோடி வழங்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்;க்கும் நாள் கூட்டம் கலெக்டர் முனைவர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்; 12 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.9.50 லட்சம் அரசு மானியத்துடன் கூடிய ரூ.34.63 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி கலெக்டர் பேசியதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தில் வேளாண்மைத்துறை மற்றும் வேளாண்மைச் சார்ந்த தோழமை துறைகளின் மூலம் பல்வேறு வேளாண் மேம்பாட்டு திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 2015-16ஆம் ஆண்டில் பாரத பிரதம மந்திரியின் புதிய பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், நெல் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ரூ.355.28 கோடி மதிப்பில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் இதுவரை 93,846 எண்ணிக்கையிலான விவசாயிகளுக்கு ரூ.354.24 கோடி மதிப்பிலான பயிர்காப்பீடு இழப்பீட்டுத் தொகை சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு, தொடர்ந்து மீதமுள்ள விவசாயிகளின் வங்கி கணக்கில் இழப்பீட்டுத் தொகை வரவு வைக்கப்பட்டு வருகின்றன.
மேலும் மாவட்டத்தில் உள்ள 51 வருவாய் கிராமங்களுக்கான பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகை குறைந்தபட்சமாக ரூ.5,375 வழங்கவுள்ளதாக பயிர்காப்பீடு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மேற்குறிப்பிட்ட 51 வருவாய் கிராமங்களுக்கும் பயிர்காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையினை பிற வருவாய் கிராமங்களுக்கு வழங்கியவாறு அதிகபட்சமாக ரூ.17,200 வழங்கிட ஏதுவாக மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டங்கள் நடத்தப்பட்டு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதேபோல பயிர்காப்பீடு தொகை நிலுவையிலுள்ள பம்மனேந்தல், அரியமங்களம், பெருநாழி, நீராவி, சக்கரனேந்தல், பட்டனேந்தல், பொதுவக்குடி, பெருங்குளம், கூகுடி ஆகிய 9 வருவாய் கிராமங்களுக்கும் பயிர் காப்பீடு இழப்பீடு தொகை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளை மேம்படுத்திடும் வகையில் குடிமராமத்து பணிகள் திட்டத்தின் கீழ் நடப்பு நிதியாண்டில் ரூ.306.57 கோடி மதிப்பில் 91 கண்மாய்களில் குடிமராமத்து திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. மேலும் நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் வட்டத்தில் 22 கண்மாய்கள், பரமக்குடி வட்டத்தில் 31 கண்மாய்கள் என மொத்தம் 53 கண்மாய்கள் ரூ.20.51 கோடி மதிப்பில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு விரைவில் பணிகள் துவங்கப்படவுள்ளன. இவ்வாறு தெரிவித்தார். முன்னதாக மாவட்ட கலெக்டர் வேளாண் பொறியியல் துறையின் மூலம் வேளாண்மை இயந்திர மயமாக்குதல் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.5.50 லட்சம் அரசு மானியத்துடன் கூடிய ரூ.30.61 லட்சம் மதிப்பிலான 5 டிராக்டர் இயந்திரங்களையும், தோட்டக்கலைத்துறையின் சார்பாக 5 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.1800 மதிப்பிலான அரசு மானிய விலையில் மாடித்தோட்ட காய்கறி தளைகளையும், மீன்வளத்துறையின் சார்பாக மீனவர் விபத்து காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு தலா ரூ.2 லட்சம் வீதம் ரூ.4 இலட்சத்திற்கான காசோலைகளையும் வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் ஆர்.அரிவாசன், கால்நடைப் பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் தி.மோகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) (பொ) பி.ராஜா, வேளாண்மைப் பொறியியல் துறை செயற்பொறியாளர் தாமஸ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ப.மு.முருகேசன், நபார்டு திட்ட பொது மேலாளர் மதியழகன் உள்பட அரசு அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |